வாருங்கள்! க்ரிஸ்பியான ஜவ்வரிசி வடையை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் நம்மில் பலரும் மாலை நேரத்தில் டீயோ காபியோ அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றோம். வழக்கமாக மாலை நேரங்களில் வடை, சமோசா,போண்டா புட்டு,கொழுக்கட்டை போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டு இருப்போம். வடையில் மெது வடை, கீரை வடை, பருப்பு வடை, மசால் வடை என்று பல விதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு விதமும் ஒவ்வொரு விதமான சுவையை தருகின்றன. அந்த வகையில் இன்று நாம் ஜவ்வரிசி வைத்து மொறுமொறுவென வடை செய்ய உள்ளோம்.
வாருங்கள்! க்ரிஸ்பியான ஜவ்வரிசி வடையை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி- 1 கப்
கடலை மாவு-1/4 கப்
வெங்காயம்-2
பச்சை மிளகாய்-3
உருளை கிழங்கு-2
இஞ்சி-1 துண்டு
சீரகம்-1 ஸ்பூன்
மிளகாய் தூள்-1/2 ஸ்பூன்
மல்லித்தழை--கையளவு
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை 2 அல்லது 3 முறை தண்ணீரில் அலசி விட்டு பின் அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொண்டு பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பன்னீர் பக்கோடாவை இப்படி செய்து தாங்க! அடுத்த நிமிடமே அனைத்தும் காலி ஆகி விடும்.
உருளைக்கிழங்கினை ஒரு குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 3 விசில் வைத்து வேக விட்டு பின் அதனை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய் ,மல்லித்தழை மற்றும் இஞ்சி ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பவுலில் ஊறிய ஜவ்வரிசியை சேர்த்து அதில் பொடியாக நறுக்கின இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தாக அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், சீரகம் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்த கலவையில் மசித்து வைத்துள்ள உருளை கிழங்கினை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லி தழை மற்றும் தேவையான உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அடுப்பின் தீயினை மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கையில் எடுத்து வடைப் போல் தட்டி கொண்டு சூடான எண்ணெயில் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஒரு பக்கம் வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போடு வேக வைத்து எடுத்தால் மொறு மொறுவென்று சூப்பரான வடை ரெடி! இதே போன்று அனைத்து மாவினையும் வடை போல் தட்டி பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.