வாருங்கள்! டேஸ்ட்டான அவல் மோர்க்கூழ் ரெசிபியை வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காலையில் எடுத்துக் கொள்ளும் உணவினை சத்தானதாக எடுத்துக் கொண்டால் நாள் முழுதும் நாம் புத்துணர்ச்சியாகவும்,உற்சாகமாகவும் இருக்க துணை புரியும். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சுவையில் அவல் சேர்த்து கூழ் செய்வதை காண உள்ளோம்.
இதில் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் பி, கலோரி, குறைந்த அளவு கொழுப்பு போன்ற உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் உள்ளதால் இது உடம்பிற்கு மிகவும் நல்லது. மேலும் இதனை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொண்டால் வெகு விரைவாக உடல் எடையை குறிக்க இயலும்.
வாருங்கள்! டேஸ்ட்டான அவல் மோர்க்கூழ் ரெசிபியை வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் பக்கோடாவை இப்படி செய்து தாங்க! அடுத்த நிமிடமே அனைத்தும் காலி ஆகி விடும்.
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் அவலை சேர்த்து வறுத்துக் கொண்டு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சின்ன கிண்ணத்தில் தயிர் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்றாக கடைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்.
எண்ணெய் சூடான பின்பு அதில் கடுகு, சீரகம், உளுந்து மற்றும் கடலை பருப்பு சேர்த்து தாளித்து விட்டு பின் பொடியாக அரிந்து வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
வெங்காயம் வதங்கிய பின்னர் அதில் கீறிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி விட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது கடாயில் கடைந்து வைத்துள்ள மோர் சேர்த்து, அவல் மாவினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். (கட்டி தட்டாமல் மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்).பின் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து கொள்ள வேண்டும்.
அவல் மாவு நன்றாக வேகும் வரை கை விடாமல் கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கி விட்டு இறுதியாக அரிந்து வைத்துள்ள மல்லித் தழையை தூவி கிளறி விட்டு பரிமாறினால் சுவையான அவல் மோர்க்கூழ் ரெடி!