மீந்து போன இட்லியை வைத்து இனிமே இப்படி செய்து கொடுங்க -" இட்லி போண்டா"

By Dinesh TG  |  First Published Jan 17, 2023, 4:35 PM IST

வாருங்கள் !சுவையான இட்லி போண்டாவை வீட்டில் எப்படி எளிமையாக வீட்டில் செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


வழக்கமாக நாம் தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்ளும் இட்லியானது சில சமயங்களில் மீந்து விடும். இப்படி மீந்த இட்லிகளை வைத்து நம்மில் அதிகமானோர் இட்லி உப்புமா, சில்லி இட்லி போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் இட்லி வைத்து ஈவினிங் ஸ்னாக்ஸாக சாப்பிடக்கூடிய விதத்தில் போண்டா ரெசிபியை காண உள்ளோம்.

இந்த இட்லி போண்டாவானது நன்கு மொறுமொறுவென்று இருப்பதால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். இதற்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இந்த இட்லி போண்டாவை ஒரு முறை  செய்து பாருங்கள். பின் இதனையே அடிக்கடி செய்து தரும் படி வீட்டில் உள்ளவர்கள் கூறும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும்.

Tap to resize

Latest Videos

வாருங்கள் !சுவையான இட்லி போண்டாவை வீட்டில் எப்படி எளிமையாக வீட்டில் செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

இட்லி போண்டா செய்ய தேவையான பொருள்கள் : 

  • இட்லி - 5
  • வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் - 3
  • கடலை மாவு - 4 ஸ்பூன் 
  • கார்ன் பிளார்- 2 ஸ்பூன் 
  • கறிவேப்பிலை - 1 கொத்து 
  • மல்லித்தழை-கையளவு 
  • உப்பு - தேவையான அளவு 
  • தண்ணீர் - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

விடுமுறை ஸ்பெஷல்- சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் செய்து அனைவரும் சாப்பிடலாம்!

செய்முறை :

முதலில் இட்லிகளை ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் கறிவேப்பிலை ,மல்லித்தழை மற்றும் பச்சை மிளகாயயை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு விலாசமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், ,மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

பின் அந்த கலவையில் கடலை மாவு,கார்ன் பிளார் மற்றும் உப்பு சேர்த்து அனைத்தும் ஒன்றாக கலக்குமாறு பிசைந்து பின் தண்ணீர் ஊற்றி மீண்டும் நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இப்போது மாவினை ஒரே அளவிலான சிறிய உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு விலாசமான கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு, அதில் உருட்டி வைத்துள்ள இட்லி உருண்டைகளை இரண்டு மூன்றாக போட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். 

உருண்டைகள் ஒரு பக்கம் வெந்து பொன்னிறமாக வந்த பிறகு அதனை மறுபக்கம் திருப்பி போட்டு வெந்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொண்டால் மொறுமொறுவென இட்லி போண்டா ரெடி!, இதே மாதிரி அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
 

click me!