Papaya aval kesari: பப்பாளி பழத்தில் செய்யும் அவல் கேசரி விரைவாக தயார் செய்யலாம். ருசியாக இருக்கும்.. அதன் செய்முறையை இங்கு காணலாம்.
பொங்கல் கொண்டாட்டத்தில் அனைவர் வீடுகளிலும் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், அவல் பொங்கல் என பொங்கல் பதார்த்தங்களால் விழா களை கட்டியிருக்கும். பொங்கல் சாப்பிட்டு அலுத்துப் போன நாவிற்கு பப்பாளி பழத்தில் அவல் கேசரி செய்து பரிமாறுங்கள். வெறும் 10 நிமிடங்களில் இந்த கேசரி தயாராகிவிடும். பப்பாளி பழமும், அவலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குபவை. குறிப்பாக குளிர்காலத்திற்கு பப்பாளி பழம் ஏற்றது.
தேவையானவை!
பப்பாளி அவல் கேசரி செய்முறை!
அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2 ஸ்பூன் நெய் விட்டு காய விடுங்கள். அதில் அவலை நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள். அதனை ரவையை போல அரைத்து தூளாக்கி கொள்ளுங்கள். பொடிமாதிரி இல்லாமல் ரவை போன்ற பதமாக இருந்தால் தான் கேசரி நன்றாக வரும். மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் அரைத்து வைத்துள்ள பப்பாளி கூழை நீர், சர்க்கரை கலந்து கிண்டி கொள்ளுங்கள். நல்ல பதமாக பப்பாளி கூழ் வரும்போது அதில் நெய் ஊற்றி அவலை சேர்த்து மூடி வைக்கவும்.
இதையும் படிங்க: வாயு தொல்லைக்கு நொடிகளில் தீர்வு! பண்டிகை கால அஜீரண கோளாறு நீங்க இதை சாப்பிட்டா போதும்
இப்போது அடுப்பில் தீ 'சிம்'மில் இருக்க வேண்டும். நெய் உருகி அவல் கேசரியுடன் குலைந்த பதமாக வரும். இதனுடன் பச்சைக் கற்பூரம், வாசனைக்காக ஏலக்காய் தூள் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, திராட்சை ஆகியவற்றையும் கலந்தால் பப்பாளி பழ அவல் கேசரி தயாராகிவிடும். இதை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிமாறினால் ருசியில் அசந்து போய்விடுவர்.
இதையும் படிங்க: குழந்தைக்கு பொல்லாத கண் திருஷ்டி படாமல் இருக்க கட்டாயம் கண்மை வைக்கணுமா? உண்மை பின்னணி என்ன?