Sardines: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!

By Dinesh TG  |  First Published Jan 27, 2023, 10:25 PM IST

ஒவ்வொரு வகையான மீனும், தனித்தனியே குணாதிசயங்களை பெற்று, பல அரிய சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அவ்வகையில், உடலுக்கு நன்மை பயக்கும் மத்தி மீனைப் பற்றித் தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.


இயற்கையில் கிடைக்கும் அனைத்து உணவுப் பொருட்களிலும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. சைவ உணவுகளைப் போல, அசைவ உணவுகளிலும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அசைவம் பிரியர்களுக்கு மிக முக்கியமான உணவு என்றால் அது மீன் தான். கடல் உணவான மீன்களில் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு வகையான மீனும், தனித்தனியே குணாதிசயங்களை பெற்று, பல அரிய சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அவ்வகையில், உடலுக்கு நன்மை பயக்கும் மத்தி மீனைப் பற்றித் தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.

மத்தி மீன்

Latest Videos

undefined

மீன் வகைகளில் மிகவும் சுவை மிகுந்தது மத்தி மீன். தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளில் அதிகமாக கிடைக்கின்ற மீன்களில் இதுவும் ஒன்று. மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில், இதன் பங்கு மிக அதிகம். மத்தி மீன்கள் தமிழ்நாட்டை விடவும், கேரளாவிற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மத்தி மீனின் நன்மைகள்

விலை குறைவாக விற்கப்படும் இந்த மத்தி மீன்களில், மனித உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், கொழுப்புச்சத்து மற்றும் தாதுச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. மத்தி மீன்களில் ஓமேகா-3 கொழுப்பு அமிலம், அதிகமாக இருப்பதால் இதய நோய் பாதிப்பு வராமல் தடுக்கிறது.

மத்தி மீன்களில் அயோடின் கலந்த தாதுச்சத்து இருப்பதால், இந்த மீனை உணவில் சேர்த்துக் கொள்வதனால் முன் கழுத்து கழலை நோய் ஏற்படுவதை தடுக்க முடியும்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பீட்ரூட் வைத்து சுவையான பீட்ரூட் பஜ்ஜி !

மத்தி மீன்களை அடிக்கடி உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா, தோல் நோய்கள் மற்றும் வயதானோருக்கு வரும் மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்பை குறைக்க முடியும்.

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், மத்தி மீனைச் சாப்பிட்டு வந்தால், பார்வை குறைபாடுகள் நீங்கி பார்வைத் திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒரு வாரத்திற்கு இருமுறை மத்தி மீனைச் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். 

மத்தி மீனில் கால்சியம் சத்து அதிகளவில் இருப்பதால் எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

தினசரி உடற்பயிற்சி செய்பவர்கள், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மத்தி மீனை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். 

கர்ப்ப காலத்தில் பெண்களுக்குச் சிறந்த உணவாக மத்தி மீன் விளங்குகிறது. இந்த மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

மத்தி மீனில் அதிகளவில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பற்களை உறுதியாக்க உதவுகிறது.

click me!