காலை உணவை தவிர்த்தால் ஆற்றலுடன் செயல்பட முடியாது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாரும் காலை உணவை தவிர்க்க கூடாது என்பதே மருத்துவ நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.
பள்ளி செல்லும் இளைஞனாக இருந்தாலும், கல்லூரி மாணவனாக இருந்தாலும், அலுவலகம் செல்பவராக இருந்தாலும், காலை உணவை (பிரேக் பாஸ்ட்) சாப்பிடாமல் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.
நம் உடலுக்கு ஆற்றல் தருவதே முதலில் காலை உணவுதான். சிலர் காலை உணவை சரியான உணவாக எடுத்துக்கொள்வதில்லை. இன்னும் சிலரோ காலை உணவையே எடுத்துக்கொள்வது இல்லை.காலை எழுந்தவுடன் சாப்பிட கூடிய 3 உணவு வகைகளை இதில் பார்க்கலாம்.
undefined
முசேலி:
ஓட்ஸ் வகையைச் சேர்ந்த மற்றொரு ஆரோக்கியமான காலை உணவு முசேலி, இதில் பைபர் மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ள உணவு தான். ஓட்ஸைப் போலவே முசேலியையும் நீங்கள் பலவகைகளில் சமைத்து சாப்பிட முடியும், இதற்கான ஏராளமான சமையல் குறிப்புகள் உள்ளது. இவை பயன்படுத்தி சிறப்பான காலை உணவை தயாரிக்கலாம்.
காலை உணவாக முசேலி சாப்பிடுவது, ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை அதிகமாக சாப்பிட வேண்டிய அவசியத்தை உங்களுக்கு ஏற்படுத்தாது, இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. முசேலியில் திராட்சை, பாதாம் மற்றும் பழங்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த பொருட்கள் இருப்பதால், இது தோல் பளபளப்பு, பளபளப்பான முடி மற்றும் ஆரோக்கியமான பார்வையை ஊக்குவிக்கிறது.
கார்ன்ஃப்ளேக்ஸ்:
கார்ன்ஃப்ளேக்ஸ் ஒரு சுவையான காலை உணவாகும். கார்ன்ஃப்ளேக்ஸ் பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது அதிகமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளன. இதில் இரும்புச் சத்து, சோடியம் மற்றும் சர்க்கரை குறைவாகவும், கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருப்பதால், கார்ன்ஃப்ளேக்ஸ் உங்களுக்கு ஆரோக்கியமான காலை உணவு மாற்றாகச் சேர்க்கிறது.
ஸ்மூத்தீஸ்:
இவை தற்போதைய ஜென் Z தலைமுறையினரிடையே பிரபலமான உணவாகும். ஒரு டீ குடிச்சிட்டு நாளை துவங்கினா புத்துணர்வா இருக்கும்னு பலரும் நினைக்கிறாங்க. ஆனால், புத்துணர்வோட சேத்து, எனர்ஜி , ஊட்டச்சத்து, ஆரோக்கியம்னு எல்லாமே கொடுக்குற மாதிரி ஒன்னு கெடச்சா எவ்ளோ நல்லாருக்கும்.
இப்படி வைட்டமின், ஆன்டிஆக்ஸிடன்ட், ப்ரோபையோட்டிக்ஸ் ஊட்டசத்துக்கள் நிறைந்து இருக்க இந்த 5 ஸ்மூத்தியை காலைல குடிச்சிட்டு உங்க நாளை தொடங்குங்க. குறிப்பா இதை குடிக்கிறதால புத்துணர்ச்சி மட்டுமில்ல இதயம், எலும்பு, குடல் ஆகிய உறுப்புகளுக்கு ஆரோக்கியம், மலச்சிக்கல் இல்லாம கழிவுகளை வெளியேற்றலாம். உடம்பு வலுவா இருக்கும்.மூன்றையும் சேர்த்து ஸ்மூத்தியாக செய்து காலையில் குடிக்கலாம். கஃபிர் ப்ரோபையோட்டிக்ஸ் நிறைந்ததால் உங்கள் உடலுக்கு நல்ல பாக்டீரியாக்களை தரும்.
அதே போல், இதில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்திருக்கும்.தேங்காய் பாலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளிட்டவை நிரைந்துள்ளது. இது, இதய நலன், எலும்பு உறுதி,உடல் எடை குறைப்பு என பலவற்றிற்கு உதவுகிறது. அதே போல், இதில் உள்ள நல்ல கொழுப்புகளும் பலவகையில் உடலுக்கு உதவுகிறது.
இதையும் படிங்க..Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?
இதையும் படிங்க..20 ரூபாய் டாக்டருக்கு பத்மஸ்ரீ விருது!.. யார் இந்த முனீஸ்வர் சந்தர் தாவர்.? வியக்கவைக்கும் வரலாறு !!