பாலுடன் இந்த பழங்களை மறந்தும் உண்ணவே கூடாது... மீறினால் உங்க உடம்பு தாங்காது..!

By Pani Monisha  |  First Published Jan 27, 2023, 5:33 PM IST

ஆயுர்வேதத்தின்படி சில உணவுகளை பாலுடன் சாப்பிடவே கூடாது. மீறி சாப்பிடும்போது, உடல்நலம் பாதிக்கப்படும். 


நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்வது அவசியம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். ஆயுர்வேதத்தின்படி, சில உணவுகளை ஒன்றாக எடுத்துக் கொண்டால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படும். இது எந்தளவுக்கு உண்மை என்பது இன்னும் ஆராயப்பட்டு வருகிறது. ஆனாலும் ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சில உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என கண்டிப்பாக கூறுகிறார். 

பால் உடலுக்கு ஆற்றல் தரும் பானம். 100மிலி பாலில் 87.8 கிராம் தண்ணீர் உள்ளதாம். அத்துடன் 4.8 கிராம் ஸ்டார்ச், 3.9 கிராம் கொழுப்பு, 3.2 கிராம் புரதம், 120 மிகி கால்சியம், 14 மிகி கொலஸ்ட்ரால் ஆகியவை உள்ளது. 100 மில்லி பசும்பாலில் 66 கலோரிகள் உள்ளன. பாலில் லாக்டோஸ் என்ற இயற்கை இனிப்பும் உள்ளது. இத்தனை சத்துக்கள் உள்ள பாலை எந்த உணவுகளுடன் உண்ணக் கூடாது என்பதை இங்கு காணலாம். 

Latest Videos

undefined

புரதம் அதிகம் இருக்கும் உணவுகள்!! 

பாலுடன் புரதம் நிறைந்த உணவுகளை ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏற்கனவே பாலில் புரதம் நிறைந்துள்ளது. மீண்டும், புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். இது செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. அதிக புரதங்களை செரிக்க நம் உடல் கடினமாக உழைக்க வேண்டும்.  

மீனுடன் பாலுக்கு நோ! 

ஆயுர்வேதத்தின்படி, பாலையும் மீனையும் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இரண்டையும் ஒன்றாக சேர்த்து உட்கொள்வது கடுமையான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று முன்னோர் கூறுகிறார்கள். இதையே தான் ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோராவும் தெரிவித்தார். பாலையும் கோழிக்கறியையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. 

இதையும் படிங்க: இந்த போராட்டம் முடிவுக்கு வராது - மயோசிடிஸ் நோய்க்கு பிறகு கடும் உடற்பயிற்சி, புது டயட்னு ஆளே மாறிபோன சமந்தா

சிட்ரஸ் பழங்கள் 

ஆயுர்வேதத்தின் படி, பால், சிட்ரஸ் பழங்களை ஒன்றாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. இவை பாலில் கலக்கும் போது பாலில் உள்ள சேர்மங்கள் உடைந்து விடும். அதனால் எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை பாலுடன் கலக்கக் கூடாது. பால் குடித்த உடனேயே சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் சிலருக்கு செரிமான பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும்.  

இதையும் படிங்க: வெறும் 10 நிமிடங்களில் கருவளையம் நிரந்தரமா போகணுமா.. வீட்டுல இருக்கிற இந்த ஒரு பொருள் போதும்..

click me!