வாருங்கள்! மொறுமொறுவென இருக்கும் ஃபிஷ் பால்ஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக நாம் பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் ,கார்ன் சீஸ் பால்ஸ் ,பன்னீர் பால்ஸ் என்று பலவிதமான ரெசிபிக்களை ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் மொறுமொறுவென மீனை வைத்து சூப்பரான மீன் பால்ஸ் ரெசிபியை காண உள்ளோம்.இதனை செய்த அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் காலி ஆகிவிடும் அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை மிகவும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை இருக்கும்.
வாருங்கள்! மொறுமொறுவென இருக்கும் ஃபிஷ் பால்ஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
குட்டிஸ்களின் பேவரைட் சீஸ் பைட்ஸ் இப்படி செய்து பாருங்க !
செய்முறை :
முதலில் மீனை சுத்தம் செய்து விட்டு அலசி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அலசிய மீனை போட்டு சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.அதே போன்று உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம்,இஞ்சி மற்றும் பூண்டினை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மீன் வெந்த பிறகு அதனை முள் இல்லாமல் எடுத்துக் கொண்டு நன்கு உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் 1 வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு, பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு போட்டு வறுத்துக் கொண்டு பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.அடுத்தாக அதில் மிளகு தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து விட்டு உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு அதை மீண்டும் 3 நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.
அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாசனை வரும் போது சிறிது மல்லித்தழையை தூவி கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆரிய கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சின்ன கிண்ணத்தில் மைதாவுடன் தண்ணீர் சேர்த்து கரைசல் செய்து கொள்ள வேண்டும். இப்போது பிடித்து வைத்துள்ள உருண்டைகளை மைதா கரைசலில் டிப் செய்து பின் அதனை பிரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதே போன்று அனைத்து உருண்டைகளையும் செய்து கொள்ள வேண்டும்.அடுப்பில் 1 கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பின் உருண்டைகளை இரண்டு இரண்டாக போட்டு தீயினை மிதமாக வைத்து இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்தால் சுவையான மீன் பால்ஸ் ரெடி! இதனை டொமேட்டோ கெட்சப் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.