வாருங்கள்! டேஸ்ட்டான சீஸ் ஸ்டிக்ஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மாலை நேரங்களில் நம்மில் அனைவருக்கும் ஏதோ ஒரு விதமான ஸ்னாக்க்ஸ் வகைகளை சாப்பபிட்டு பழகி இருக்கிறோம். வழக்கமாக நாம் புட்டு, வடை, போண்டா, பஜ்ஜி போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டு இருப்போம்.இன்று நாம் சீஸ் வைத்து ஒரு மாலை நேர ஒரு ஸ்னாக்ஸ் வகையை செய்ய உள்ளோம்.சீஸ் சேர்த்து செய்யப்படும் உணவுகள் அதன் சுவையை அதிகப்படுத்தும். சீஸ் சேர்த்து உணவுகளை சிறு குழந்தைகள் மிகவும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள் .
அப்படி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சீஸ் வைத்து இன்று சுவையான சீஸ் ஸ்டிக்ஸ் ரெசிபியை காண உள்ளோம்.இதனை மிக குறைந்த நேரத்தில் செய்து விடலாம். மேலும் இதனை சிறு குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவை அலாதியாக இருக்கும்.
வாருங்கள்! டேஸ்ட்டான சீஸ் ஸ்டிக்ஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
undefined
குளுகுளுவென்று குலுக்கி சர்பத் செய்து பருகலாம் வாங்க!
செய்முறை:
ஒரு பௌலில் மைதா, கார்ன் பிளார், பேக்கிங் சோடா, மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் பிரட் க்ரம்ஸ் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இப்போது பௌலில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையில் சீஸை சேர்த்து பிசைந்து விட்டு, சுமார் 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விட வேண்டும்.
10 நிமிடங்களுக்கு பிறகு அந்த பிசைந்த கலவையை நீளமான துண்டுகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை பிரட் க்ரம்ஸில் நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு அதில் நீளமாக உருட்டி வைத்துள்ள துண்டுகளைப் போட்டு தீயினை மிதமாக வைத்து விட வேண்டும்.
ஸ்டிக்ஸ்களை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான சீஸ் ஸ்டிக்ஸ் ரெடி! இதனை டொமேட்டோ கெட்சப் வைத்து சாப்பிட்டால் சூப்பராக அருமையாக இருக்கும். நீங்களும் இதனை 1 முறை செய்து அசத்துங்க.