Skin Care: சருமப் பராமரிப்பிற்கு சாத்துக்குடியை இப்படி பயன்படுத்தி பாருங்க!

By Dinesh TGFirst Published Jan 27, 2023, 9:20 PM IST
Highlights

சாத்துக்குடியில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள், வயதான தோற்றம் ஏற்படுவதை தடுத்து, இளமையாக வைத்திருக்க உதவுகிறது. அவ்வகையில் சாத்துக்குடியை முகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்று காண்போம். 

அனைத்துப் பருவ காலங்களிலும் எளிதில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான பழம் சாத்துக்குடி. இது உடல் நலத்திற்கு மட்டுமின்றி, சரும அழகை பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது. சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிகளவில் நிறைந்துள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுத்து, உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள், வயதான தோற்றம் ஏற்படுவதை தடுத்து, இளமையாக வைத்திருக்க உதவுகிறது. அவ்வகையில் சாத்துக்குடியை முகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்று காண்போம். 

சாத்துக்குடியில் உள்ள சத்துக்கள்

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை மிகுந்த, விலை குறைந்த பழம் சாத்துக்குடி. இந்த சிட்ரஸ் பழத்தில் 90% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இப்பழம் எலுமிச்சை குடும்ப வகையை சேர்ந்தது. சாத்துக்குடி குறைவான கலோரிகளை கொண்டுள்ளது. இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்பு, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி என பல சத்துக்கள் அதிகமாகவே உள்ளது. 100 கிராம் சாத்துக்குடி பழத்தில் கலோரி 43 கி, பொட்டாசியம் 490 மி.கிராம், வைட்டமின் சி 60%, கால்சியம் 3% மற்றும் இரும்புச்சத்து 8% அளவு உள்ளது.

சாத்துக்குடியை எப்படி பயன்படுத்தலாம்?

சாத்துக்குடி சாற்றை குடிப்பதற்கு மட்டுமின்றி, முகத்திற்கு ஃபேஸியல் ஆகவும் பயன்படுத்தலாம். சருமத்தில் படிந்திருக்கும் கறைகளை அகற்ற சாத்துக்குடி சாறு உதவுகிறது.

சருமத்தை பிளீச்சிங் செய்வதற்கும் சாத்துக்குடியை பயன்படுத்தலாம்.

சாத்துக்குடி சாற்றில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து, நன்றாக முகத்திற்கு பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். சிறிது நாட்கள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் விரைவாக மறையும்.  

சாத்துக்குடி சாற்றைத் தொடந்து குடித்து வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும். முகப்பருக்களில் இருந்து இரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகளும் தீரும். 

சாத்துக்குடியின் பயன்கள்

சாத்துக்குடியில் லிமோனோய்ட்ஸ் எனும் பொருள் உள்ளது. ஆகையால் இப்பழத்தை தினந்தோறும் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Hemoglobin: ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் அற்புத பானத்தை தயாரிப்பது எப்படி?

செரிமானத்திற்கு மிகவும் சிறந்த பழம் சாத்துக்குடி. இப்பழத்தின் சாற்றை குடிப்பதாலோ அல்லது பழத்தை நேரடியாக உண்பதாலோ செரிமான சக்தி மேம்படும். மேலும், இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவி புரிகிறது.

சாத்துக்குடி பொட்டாசியம் நிறைந்த பழம். இது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை நச்சுத் தன்மையை போக்க உதவுகிறது. சிறுநீர்த் தொற்று பிரச்சனையை அடிக்கடி சந்திப்பவர்கள், தினந்தோறும் ஒரு கிளாஸ் சாத்துக்குடி சாறு குடித்து வந்தால், சிறுநீர்த் தொற்று இல்லாமல் போகும்.

சாத்துக்குடியை சாப்பிடுவதால் இரும்புசத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் நிறைய கனிமங்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது.

click me!