Skin Care : சருமத்திலுள்ள சுருக்கங்களை தடுக்க இதை செஞ்சா போதும்..!!

By Dinesh TG  |  First Published Jan 27, 2023, 1:50 PM IST

இரண்டு டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவுவது, இளமையான தோற்றத்தை தக்கவைக்கும்.
 


சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றும் பிரச்னையால் பலரும் அவதி அடைந்து வருகின்றனர். அதேபோல், வயதானாலும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். சருமப் பராமரிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் ஓரளவு இதை தடுக்கலாம். சரியான தோல் பராமரிப்பு முன்கூட்டிய சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளைத் தடுக்கும். அதற்கு ஆலிவ் எண்ணெய் பெரியளவில் பலனை தரக்கூடியதாக உள்ளது. 

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ உள்ளது. இது சருமத்திற்கு நெகிழ்ச்சித் தன்மையை வழங்குகிறது. இதன்மூலம் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கிறது. ஆலிவ் எண்ணெய் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கவும், சருமத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கவும் உதவுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இரண்டு டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். அதை 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தக்காளியில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் லைகோபீன் என்கிற கலவையும் உள்ளது. இது திறந்த துளைகளை குறைக்கிறது மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது.

தலைக்கு குளிக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

இதேபோல், சம அளவு ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, சருமத்தில் தேய்ப்பதும் நல்ல பலன்களை வழங்குகிறது. இது சுருக்கங்களைக் குறைக்க உதவும். எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி உள்ளது. அதனால் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு முன்னரும், இதை பயன்படுத்துவது கூடுதல் பலனை தருகிறது,

அதேபோல், ஆலிவ் எண்ணெய் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆலிவ் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி ஆவியில் வேகவைத்து வந்தால் சரும செல்கள் சுத்தமாகும். இதனால் கரும்புள்ளிகள் நீங்கும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அழகுக் குறிப்புகளை தொடர்ந்து செய்து வர வேண்டும். நிறுத்தி, நிறுத்தி செய்தால் எந்த பலனும் கிடைக்காது.

click me!