முகத்துக்கு பளபளப்பு மற்றும் புத்துயிரை கூட்டும் தயிர்..!!

By Dinesh TGFirst Published Jan 24, 2023, 8:06 PM IST
Highlights

தயிர் சருமத்திற்கும் சிறந்தது என்பது பலருக்கும் தெரியும். பல நாளாக இருந்து வரும் பிரச்னைகளுக்குக் கூட தயிர் உடனடி நிவாரணம் வழங்கும் அற்புத பொருளாகும். சருமம் புத்துயிர் பெறவும் மற்றும் டார்க் ஹெட்ஸை அகற்றவும் பெரியளவில் உதவும்.
 

தயிர் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். தினசரி மதியவேளையில் தயிர் உணவை எடுத்துக்கொள்வது, அன்றைய நாளில் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளன. தயிர் சாப்பிடுவதைத் தவிர, சருமத்துக்கும் பல்வேறு அதிசியங்களை வழங்குகிறது. இது சருமத்தை புத்துயிர் பெறச் செய்து, கரும்புள்ளிகளை அகற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் முகத் தோலின் தரத்தை மேம்படுத்தவும், சருமத்தை மேலும் நீரேற்றமாக மாற்றவும் தயிர் பயன்படுகிறது. உங்கள் சருமத்தை மேம்படுத்த தயிரை வேறு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தயிர் மற்றும் தேன் மாஸ்க்

இறந்த சரும செல்கள் மற்றும் தோலில் இருந்து நிறமிகளை அகற்ற தயிர்-தேன் கொண்டு செய்யப்படும் ஃபேஸ் பேக் பெரிதும் உதவும். இதன்மூலம் கரும்புள்ளிகள் அகன்று, சருமத்துக்கு பளபளப்பு கிடைக்கின்றன. தயிருடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவவும். இந்த முகமூடியை உங்கள் முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்களுக்கு அப்படியே விடவும், பின்னர் உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

தயிர் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

இவ்விரண்டு பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ஃபேஸ் மாஸ்க்கில் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதுவும் கரும்புள்ளிகளை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து இதை பயன்படுத்தி வருவதன் மூலம் சருமம் இயற்கையான பளபளப்பை பெறும். இரண்டு டீஸ்பூன் தயிர் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மட்டுமே இந்த மாஸ்க் செய்ய தேவையான பொருட்களாகும். அதை கலவையாக்கி முகத்தில் 15 நிமிடங்கள் வைத்திருந்தால் போதும். சுத்தமான நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவிடலாம். வாரத்திற்கு இரண்டு முறையாவது போடுங்கள். விரைவாக வேறுபாடு தெரிய வரும்.

மொச்சைப் பயிறுகளில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

தயிர் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்

தயிர் மற்றும் ஓட்ஸ் முகமூடி என்பது பல ஆண்டுகளாக மக்களின் பழக்கத்தில் இருந்து வருகிறது. தோல் மற்றும் துளைகள் இரண்டையும் ஆழமாக சுத்தப்படுத்துவதில் இது பயனுள்ளதாக இருக்கும். இந்த மாஸ்க்கை வெறும் 5 நிமிடங்களில் செய்துவிடலாம். இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் தூளில் ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் ரோஸ் வாட்டரை மட்டும் பயன்படுத்தவும், அதை குறைந்து 15 நிமிடங்கள் முகத்தில் வைத்திருந்து சுத்தம் செய்துவிடலாம். தண்ணீரில் கழுவும் போது உங்கள் முகத்தை மெதுவாக தேய்ப்பது முக்கியம்.
 

click me!