ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய அரிசி.. அதுவும் திருமணத்திற்கு தயாராகும் ஆண்கள் கண்டிப்பாக சாப்பிடணும்..! ஏன்?

Published : Aug 03, 2023, 01:06 PM ISTUpdated : Aug 03, 2023, 01:18 PM IST
ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய அரிசி.. அதுவும் திருமணத்திற்கு தயாராகும் ஆண்கள் கண்டிப்பாக சாப்பிடணும்..! ஏன்?

சுருக்கம்

நாம் சாப்பிடும் அரிசியில் பல வகையான வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் மாப்பிள்ளை சம்பா அரிசி. இந்த அரிசியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் இதை  சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

நாம் சாப்பிடும் அரிசியில் 20 ஆயிரத்துக்கும் மேல் நெல் ரகங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் சில ரகங்கள் மறைந்துவிட்டது. தற்போது 200 வகையான நெல் ரகங்கள் மட்டுமே உள்ளது. அவை சீரக சம்பா , காட்டு பொன்னி, சின்ன பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு நெல் ரகங்கள் உள்ளன. இந்த வகையான பாரம்பரிய அரிசிகள் நோய்களின் தீவரத்தை கட்டுப்படுத்துவதில் பெருமளவு உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த வகையில் இப்பதிவில் நாம் மாப்பிள்ளை சம்பா அரிசியை குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

மாப்பிள்ளை சம்பா:
இந்த அரிசி அதன் பெயருக்கு ஏற்றார் போல புது மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு மிகவும் அவசியம். ஏனெனில் இதில் பல வகையான சத்துக்கள் உள்ளன. இது புது மாப்பிள்ளைகளுக்கு மிகவும் அவசியம்
இந்த அரிசி வளரும் ஆண்பிள்ளைகளுக்கு ஏற்றது. இந்த அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் துத்தநாக சத்துகள் உள்ளன. இதில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளது. அவை நம் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கிறது. இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது ஆண்மை பலப்படுத்தும். இப்போது புரிகிறதா நம் முன்னோர்கள் இதற்கு ஏன் மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வைத்தார்கள் என்று. இதில் இந்த சத்து மட்டுமல்லாமல், வேறு பலவகையான பலன்களுக்கும் இது உதவுகிறது. 

இதையும் படிங்க: ஒரு மாதம் அரிசி சோறு சாப்பிடாவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும்? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க..!

சமீப காலமாக முறையற்ற உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனையை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது தவிர ஓய்ந்த பாடில்லை. "உணவே மருந்து" இது என்ற பழமொழி உண்டு இது நோய்களுக்கு மட்டுமல்ல; ஆண்மை குறைபாட்டுக்கும் தான். அந்த வகையில் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் ஆண் தன்மை அதிகரிக்கவும், உடலுக்கு பலம் கொடுக்கும் சத்துகள் இருக்கிறது. ஆகையால் ஆண்மை குறைபாடு உள்ள ஆண்கள் தினமும் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை சாப்பிட்ட வேண்டும். இது உங்கள் உடலுக்கு வலு கொடுக்கும். பின் ஒரு மாதம் கழித்து அதற்கான பலனை நீங்கள் உணர்வீர்கள்.

மேலும் நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எனவே நீங்கள் பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் இருக்கும் நார்ச்சத்து நீரிழிவு நோயை  கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவை நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. அதுபோல் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த அரிசியை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இதையும் படிங்க: உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் அரிசியை எளிதாக கண்டுபிடிக்கலாம்.. எப்படி தெரியுமா?

முக்கியமாக இந்த அரிசியில் உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவவும், இரத்த அழுத்தம் சீராக வைக்கவும், இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. குறிப்பாக, இதில் இருக்கும் 
அதிகப்படியான நார்ச்சத்து புற்று நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!
Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி