ரஷ்யாவில் பெண்ணை 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள செல்யாபின்ஸ்கில், 14 ஆண்டுகளாக ஒரு பெண்ணை பாலியல் அடிமையாக வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதான எகடெரினா என்ற பெண் தான் 2009 முதல் சிறைப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 1000 முறைக்கு மேல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் அப்பெண் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட, 51 வயதான விளாடிமிர் செஸ்கிடோவ், 2011 இல் அதே வீட்டில் மற்றொரு பெண்ணைக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
எகடெரினா தன்னை சிறைபிடித்த நபரிடமிருந்து தப்பித்து, காவல்துறையில் புகார் செய்ததை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அந்தப் பெண் தப்பிக்க உதவியதில் செஸ்கிடோவின் தாயின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
எகடெரினா காவல்துறையில் தான் அனுபிவித்த கொடுமைகள் குறித்தும் தெரிவித்துள்ளார். அதாவது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக மட்டுமே படுக்கையறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாகவும், இது கத்தி முனையில் பலநூறு முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். சிறு பிரச்சனைகளுக்காக மீண்டும் மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து ஸ்மோலினோ கிராமத்தில் உள்ள செஸ்கிடோவின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆபாச படங்கள் அடங்கிய சிடிக்கள், பாலியல் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
2011 ஆம் ஆண்டு செஸ்கிடோவ் ஒக்ஸானா என்ற மற்றொரு பெண்ணைக் கொன்றதாகவும், உடலை அப்புறப்படுத்த உதவுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மனித எச்சங்கள் பின்னர் செஸ்கிடோவின் வீட்டின் அடித்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
செஸ்கிடோவ் 2009-ம் ஆண்டில் எகடெரினாவுக்கு 19 வயது இருக்கும் போது சந்தித்தார். மது அருந்தலாம் என்று கூறி தனது வீட்டிற்கு அழைத்த அவர், வீட்டிற்கு சென்றவுடன், கத்தி முனையில் எகடெரினாவை பிணைக் கைதியாக சிறைபிடித்துள்ளார்.
செஸ்கிடோவ் மனநோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது நிலை மோசமடைந்தபோது, அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட எகடெரினா, செஸ்கிடோவ் பிடியில் இருந்து தப்பித்துள்ளார்.
செஸ்கிடோவ் தற்போது கொலை, கற்பழிப்பு மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். தற்போது, அவர் ஒரு மனநல காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டு காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும், குற்றவாளியின் கொடூரமான செயல்களுக்கு பொறுப்பேற்கவும் அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
தாயே குழந்தைகள் மீது வெந்நீரைக் கொட்டிய கொடுமை! சிங்கப்பூர் பெண்ணின் கொடூரச் செயல்!