குங்குமப்பூ - ஒரு விலை உயர்ந்த தாவரம் மற்றும் மிகவும் அரிதானதும் கூட. இதன் பிரகாசமான நிறம் மற்றும் அதன் அருமையான நறுமணம் பல்வேறு மிளகாய் சமையல் வகைகளில் காணப்படுகிறது.
பொதுவாக குங்குமப்பூ இந்திய இனிப்பு தயாரிப்புகளில் குறிப்பாக பாயசத்தில் அதிக சுவையூட்ட பயன்படுத்தப்படுகிறது. இது பிரியாணி, கேக்குகள் மற்றும் ரொட்டி போன்ற உணவிலும் பயன்படுத்தப்படுகிறது.
குங்குமப்பூஒரு நறுமணத் தாவரமும் கூட, எனவே, வாசனை திரவியங்கள் மற்றும் முக ஒப்பனைப் பொருட்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக குங்குமப்பூ மரபுவழி மாற்று மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆண்டி-ஆக்சிடென்ட்ஸ் மற்றும் தாவரத்தின் வேதியில் கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
குங்குமப்பூ-வை ஒரு நச்சுகொல்லியாகவும், செரிமான தூண்டுகோலாகவும், மனசோர்வு நீக்கியகவும் மற்றும் வலிப்பு நீக்கியாகவும் பயன்படுத்தலாம். இதில், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் A, வைட்டமின் C போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் இதில் உள்ளன.
Yoga : மனம் வலுப்பெற, உடல் எடைக் குறைய உதவும் யோகாசனங்கள்!
குங்குமப்பூ உடல் நல பயன்கள்
நோய் எதிர்ப்புக்கு : கரோட்டினாய்டுகள் இருப்பதால், குங்குமப்பூ ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தடகள வீரர்களுக்கு : குங்குமப்பூ விளையாட்டு செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், தசை பெருந்திறல் வலிமையையும் கூட்டுகிறது.
கொழுப்பு குறைக்க : முழு கொழுப்பு, எல்டிஎல் (குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம்) மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அளவுகளை குங்குமப்பூவின் பயன்பாடு குறைக்கிறது.
மூளைக்கு: குங்குமப்பூவில் உள்ள பல கலவையான கனிமங்கள் மூளையை ஒரு ஆற்றல்மிக்க மன சோர்வு நீக்கி செயல்பட வைக்கிறது.
வயிறு புண் ஆற்றும் : இதன் ஆண்டி-ஆக்சிடென்ட் தன்மைகள் காரணமாக வயிற்று புண்கள் இருந்து குங்குமப்பூ நிவாரணம் அளிக்கிறது.
கண் பாதுகாப்பு : குங்குமப்பூவானது ஆண்டி-ஆக்சிடென்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது கண்களை பாதுகாத்து பார்வை மேம்படஉதவுகிறது
நச்சு நீக்கி : குங்குமப்பூ உடலில் பல சேர்மங்கள் இருந்து நச்சுகள் நீகியாக செயல்பட்டு உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீகுகின்றன.
Fashion Tips : குண்டான பெண்கள் ஒல்லியாக தெரியணுமா? உங்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ!
குங்குமப்பூவின் பக்க விளைவுகள்
நாள்தோறும் குங்குமப்பூ எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பரவலாக நம்பப்படுகிறது. இருப்பினும், குங்குமப்பூவை ஒவ்வாமை கொண்டவர்கள் பயன்படுத்தும் போது மூக்கடைப்பு , சுவாசப் பிரச்சனை, குமட்டல் மற்றும் பதட்டம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பக்க விளைவுகள் அரிதாகவே காணப்பட்டாலும், எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கர்பத்தின் இறுதி காலத்தில் குங்குமப்பூ எடுத்துகொள்வது பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டாலும், கர்ப்பம் தரித்த முதல் 20 வாரங்களில் பெண்கள் அதிக அளவு குங்குமப்பூவை உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது. குங்குமப்பூ காரணமாக ஏற்படும் கருப்பப்பை சுருக்கம் மற்றும் இரத்தப்போக்கு இந்த விளைவின் முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது.