Health Tips : கொய்யா உடலுக்கு நல்லது தான்- ஆனால்..? நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை..!!

By Dinesh TGFirst Published Sep 13, 2022, 4:06 PM IST
Highlights

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தில் கொய்யா பழத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இதில் வைட்டமின்கள், கனிம சத்துக்கள், நார்சத்து போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உள்ளன. இதில் கலோரிகள் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உகந்த பழமாக கொய்யா உள்ளது. இதனுடைய தனி சுவை மற்றும் மணம் எல்லோரையும் கவர்ந்து இழுத்துவிடும். வெள்ளை கொய்யாப் பழம், சிவப்பு கொய்யாப் பழம் என இரண்டு வகை உண்டு. இதில் சிகப்பு கொய்யாப் பழம் அதிக ஊட்டசத்து மிகுந்ததாக உள்ளது. இப்பழத்தில் ஃபோலேடு மற்றும் பீட்டார் கரோட்டின் இருப்பதால், குறிப்பிட்ட உடல்நலன் சார்ந்த பிரச்னை கொண்டவர்கள் தவிர்ப்பது நல்லது. அவர்கள் யாரெல்லாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
 

நாள்பட்ட சளி தொந்தரவு

நீண்ட காலமாக சளி தொந்தரவு கொண்டவர்கள் கொய்யாப் பழத்தை தவிர்ப்பது நல்லது. இதற்கு குளிர்ச்சியான தன்மை உண்டு. சளி தொந்தரவு கொண்டவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டால் அவர்களுக்கு பிரச்னை அதிகரிக்கும். மேலும், இந்த பாதிப்பு கொண்டவர்கள் இரவு நேரங்களில் கொய்யா பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோன்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த கொய்யா பழத்தை, உடனடியாக வெளியே எடுத்து சாப்பிடுவதும் அசவுகரியத்தை தரும். ஒருவேளை சளி தொந்தரவு இல்லாதவர்களுக்குக் கூட, இதனால் பக்க விளைவு ஏற்படலாம்.

வயிறு உணர்திறன்

உங்களுடைய வயது அதிக உணர்திறன் கொண்டது என்றால் கொய்யாப் பழத்தை போதுமான அளவில் சாப்பிட வேண்டும். இந்த பழத்தில் பிரக்டோஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது. மலச்சிக்கல் கொண்டவர்கள் கொய்யாப் பழத்தை சாப்பிட்டால், உடனடி தீர்வு கிடைக்கும். அதனால் போதுமான அளவில் மட்டுமே கொய்யாப் பழத்தை உட்கொள்ள வேண்டும். அதிக உணர்திறன் கொண்ட வயிற்றை கொண்டவர்கள், பார்த்து சூதானமாக இருக்க வேண்டும். தொடர்ந்து கொய்யாவை சாப்பிடுபவர்கள் உடல் வீக்கத்தை அதிகரிக்கும். கொய்யாப் பழத்தை சாப்பிட்டுவிட்டு உடனடியாக தூங்கச் செல்ல வேண்டாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டுப்பாடு

கொய்யா பழத்திலுள்ள கிளைசெமிக் இண்டெக்ஸ் நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. எனினும் ஒரு 100 கிராம் கொண்ட கொய்யாவில் 7 கிராம் சக்கரை உள்ளது. அதனால் இதை நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும் ஒருவேளை இதை அதிகளவில் எடுத்துக்கொண்டால் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்க. 

சாக்லேட்டுகள் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும்- தெரியுமா உங்களுக்கு..??

கொய்யா ஒரு நார்ச்சத்து நிறைந்த பழமாகும். இது செரிமானத்துக்கு எளிமையாக நடக்க உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனைகளை நீக்குகிறது. அதற்காக அதிகளவில் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. தொடர்ந்து இப்பழத்தை அதிகளவில் எடுத்துக் கொள்ளும் போது  செரிமான அமைப்பில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 

click me!