
வாழ்க்கை முறை மாற்ற வேண்டும்
இந்தியாவில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் பலரும் அவதியுற்று வருகின்றனர். இதை நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம். அதற்கான வழிமுறைகளும் எளிதாகவே அமைக்கப்பட்டுள்ளன. நீர் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, மீன் உணவுகளை எடுத்துக் கொள்வது, துரித உணவுகளை தவிர்ப்பது, நடைப் பயிற்சி செய்வது போன்றவை உடனடி பலன் தரக்கூடியதாக உள்ளது.
நல்ல பயனை தரும் டார்க் சாக்லேட்
பொதுவாக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் இனிப்பு சாப்பிடக் கூடாது என்று வலியுறுத்தப்படுவதுண்டு. ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் டார்க் சாக்லேட் என்கிற இனிப்பு குறைவான சாக்லேட்டுகளை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பயன் தரும் பாலிஃபினால்கள்
இனிப்புக் குறைவான, கசப்பு மிகுதியாக காணப்படும் டார்க் சாக்லேட்டு கோகோ டெரிவேட்டிவ்களில், 70 விழுக்காட்டுக்கும் அதிகமாக பாலிஃபினால்கள் சேர்க்கப்படுகின்றன. இதன்மூலம் நல்ல கொழுப்பை உடலில் அதிகர்த்துக் கொள்ள முடிகிறது. இது உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இருதய பாதிப்பு வராது
டார்க் சாக்லேட்டு சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைவதால், ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை அளவு ஆகியவை கட்டுக்குள் இருக்கும். இதனால் இருதய பாதிப்பு சார்ந்த பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகிறது. இதன்காரணமாக மேலைநாடுகளில் பலரும் டார்க் சாக்லேட்டுகளை விரும்பி உண்கின்றனர்.
மது அருந்துவதால் பல நன்மைகளும் ஏற்படும்- உங்களுக்கு தெரியுமா??
cocoa-வில் அதிக பாலிஃபீனால்கள்
நாம் சாப்பிடும் இனிப்பு சாக்லேட்டுகளில் Cacao என்கிற தூள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் டார்க் சாக்லேட்டுகளில் cocoa என்கிற தூள் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள அதிகளவிலான பாலிஃபீனால்கள் , மனித உடலில் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சில மருந்துகள் மூலம் நம்மால் கொலஸ்ட்ராலை குறைக்கவும் முடியும் என்றாலும், நம்முடைய உணவுப் பழக்கங்களை மாற்றுவதன் மூலமாகவே நல்ல தீர்வு கிடைக்கும்.