Chappathi With Kuruma : சப்பாத்திக்கு ஒரு புதுவித சைட் டிஸ் ''காலிப்ளவர் பட்டாணி குருமா''!

By Dinesh TG  |  First Published Sep 12, 2022, 12:41 PM IST

சப்பாத்திக்கு சட்னி, குருமா சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா. இந்த காலிப்பிளவர் பட்டாணி குருமா டிரை பண்ணி பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம். வாருங்கள், காளிப்ளவர் பட்டாணி குருமா எப்படி செய்வது என இந்தப் பதிவில் காணலாம்.
 


சப்பாத்திக்கு சட்னி, குருமா சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா. இந்த காலிப்பிளவர் பட்டாணி குருமா டிரை பண்ணி பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம். வாருங்கள், காளிப்ளவர் பட்டாணி குருமா எப்படி செய்வது என இந்தப் பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

கால் கிலோ காலிஃப்ளவர்

கால் கப் பட்டாணி

கால் கிலோ உருளைக் கிழங்கு

5 மிளகாய் வத்தல்

ஒரு பெரிய வெங்காயம்

ஒரு ஸ்பூன் சோம்பு

இரு சில்லு தேங்காய் பத்தை

கொஞ்சம் கொத்தமல்லி

தேவையான அளவு உப்பு

10 நிமிடத்தில் சுவையான ''முருங்கைக்காய் கிரேவி''!

செய்முறை

முதலில், காலிஃப்ளவரை வெண்ணீரில் மஞ்சள் இட்டு நன்றாக கழுவி சிறுசிறு துண்டுகளாய் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், மிளகாய் வத்தல், நறுக்கிய தேங்காய் , சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பட்டாணியை கழுவி குக்கரில் வேக வைத்துகொள்ளவும். உருளைக்கிழங்கினையும் கழுவி அவித்து தோல் உரித்து, 4 அல்லது 6 பாகங்களாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தையும் கழுவி நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் காலிஃப்ளவரை போட்டு வதக்க வேண்டும்.பின்பு பட்டாணியையும் உருளைகிழங்கையும் அதனுடன் சேர்த்து, அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு வதக்க வேண்டும். தேவைப்பட்டால், சிறிது நீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து சில நிமுடங்கள் மூடி வைத்து வேக விட வேண்டும்.

குருமா நன்கு வாசம் வரும் வரை வெந்தவுடன், கொத்தமல்லி தழையினைத் தூவி இறக்க வைத்தல் சுவையான காலிஃபிளவர் பட்டாணி குருமா தயார்.

click me!