Health: உடலில் உள்ள கொழுப்பு குறையனுமா? - அப்போ தினமும் இந்த பழத்தை சாப்பிடுங்க

By manimegalai a  |  First Published Nov 23, 2021, 10:12 PM IST

உடலில் அதிகப்படியான கொழுப்பு உருவாவதைத் தடுப்பதோடு, உடல் கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மையும் பப்பாளி பழத்திற்கு உள்ளதாம்.


பப்பாளியை சாப்பிட்டால் அழகு கூடும், தேகம் பளபளப்பாகும் என்ற எண்ணத்திலேயே அதை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், பப்பாளியில் ‘வைட்டமின் ஏ’ அதிகளவு நிறைந்துள்ளது. இதைச் சாப்பிடுவதால் செரிமானத் திறன் அதிகரிக்கும். மேலும் உடலின் ரத்தத்தைச் சுத்திகரிப்பதோடு, வயிற்றுப் புழுக்களையும் அழிக்கும். தினமும் ஒரு துண்டு பப்பாளி சாப்பிட்டால் கண்பார்வை பளிச்சிடுவதோடு, மலச்சிக்கலும் தீரும்.

Latest Videos

undefined

பப்பாளி பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளன. அவை உடலில் அதிகப்படியான கொழுப்பு உருவாவதைத் தடுக்கிறது. இயற்கையாகவே உடல் கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை பப்பாளி பழத்திற்கு உண்டு.

பல் சம்பந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதுமாம். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும் பப்பாளி சாப்பிட வேண்டுமாம்.

பப்பாளி பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்குவதோடு, செரிமானத்திற்கும் உறுதுணையாக இருக்கும். குறைவான கலோரிகளும், வளமையான ஊட்டச்சத்துகளும் நிறைந்த பப்பாளியை தினமும் உட்கொள்ளுங்கள். செரிமானத்திற்கு உதவி செய்வதால், இது உடல் எடையையும் குறைக்க  உதவும்.

click me!