5-4-3-2-1 வாக்கிங் முறை தெரியுமா? 'எடையை' குறைக்க பெஸ்ட் வழி இதுதான்

Published : Dec 02, 2025, 11:23 AM IST
5-4-3-2-1-walking method

சுருக்கம்

5-4-3-2-1 நடைபயிற்சி பிரமிட் முறை பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கான எளிய, பயனுள்ள மற்றும் பாதுகாப்பான பயிற்சி எதுவென்றால் அது நடைபயிற்சி தான். ஆனால் தினமும் வாக்கிங் சென்றும் போதிய பலன் தரவில்லை என்று நீங்கள் நினைத்தால் தற்போது ட்ரெண்டில் இருக்கும் 5-4-3-2-1 நடைபயிற்சி பிரமிட் முறை உங்களுக்கு பெரிதும் உதவும்.

இந்த பிரபலமான நுட்பமானது உங்கள் நடைபயிற்சி பயணத்திற்கு அமைப்பு, தீவிரம் மற்றும் பன்முகத் தன்மையை சேர்க்கின்றது. இதனால் கலோரிகள் வேகமாக எடுக்கப்பட்டு எடை இழப்பை துரிதப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த பயிற்சியாகும்.

5-4-3-2-1 நடைபயிற்சி பிரமிட் முறை என்றால் என்ன?

5-4-3-2-1 நடைபயிற்சி பிரமிட் முறை என்பது நேரத்தை அடிப்படையாகக் கொண்ட நடைபயிற்சி ஆகும். இது கலோரிகளை அதிகமாக எரிக்கவும், உடல் எடையை வேகமாக குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் ஒரு சூப்பரான நடைபயிற்சி முறையாகும். அதாவது இது 5 நிமிடத்தில் வேகமாக நடப்பதில் தொடங்கி பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் நேரத்தை குறைக்கும். மொத்த நடைபயிற்சியின் நேரத்தை 15 நிமிடங்களுக்குள் இது கொண்டு வருவதாகும்.

5-4-3-2-1 நடைபயிற்சியின் முறை ;

  • 5 நிமிடங்கள் - வேகமாக நடப்பது 4 நிமிடங்கள் - வேகத்தை சற்று குறித்து சீராக நடப்பது 3 நிமிடங்கள் - வேகத்தை மேலும் குறைத்து மிதமாக நடப்பது 2 நிமிடங்கள் - மிகவும் மெதுவாக நடப்பது 1 நிமிடங்கள் - மிகவும் குறைவான வேகத்தில் நடப்பது
  • இந்த முறைப்படி நீங்கள் தினமும் வாக்கிங் சென்றால் நடைபயிற்சி வேகத்தை, நேரத்தை கட்டுப்படுத்தி கலோரிகளை வேகமாக எரிக்கும். உடல் எடையை குறைக்கும் மற்றும் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும் இந்த முறையானது பெரிதும் உதவுகிறது.
  • இந்த நடைபயிற்சி முறையானது மொத்தம் 15 நிமிடங்கள் என்பதால் ஒரு முறை இதை நீங்கள் முடித்தால் கூட மீண்டும் செய்யலாம்.

5-4-3-2-1 நடைபயிற்சி முறையானது எடையை குறைக்க எவ்வாறு உதவுகிறது?

- இந்த முறையில் வாக்கிங் சென்றால் அதிக கலோரிகள் எடுக்கப்படுகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வேகமாக மற்றும் மிகவும் குறைவான வேகங்களுக்கு இடையில் மாறி மாறி நடப்பதால் இதயத்துடிப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். மேலும் உடற்பயிற்சிக்கு பிறகும் உங்கள் உடலில் அதிக கொழுப்பு எரிக்கவும் இந்த முறை உதவுகிறது.

- வேகத்தை மாற்றி மாற்றி நடப்பது உங்கள் தசைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

- இந்த முறையில் நடைபயிற்சி செய்தல் சலிப்பை தராமல் சுவாரசியத்தை தருகிறது.

- வேகமான மற்றும் மிதமான வேகங்களில் நடப்பதால் இதயம், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.

- இந்த நடை பயிற்சி செய்யும் போது உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் நடைபயிற்சிக்கு ஆதரவான காலணிகள், ஆடையை அணியுங்கள்.

- அதிகபட்ச கலோரிகள் எரிப்புக்கு 1-3 முறை இந்த பிரமிட் நடைபயிற்சி செய்யவும்.

5-4-3-2-1 நடைபயிற்சி முறையானது உங்களது தினசரி நடைப்பயணத்தில் கலோரிகளை எரிக்கும், உடல் வலிமை அதிகரிக்கும் ஒரு சக்தி வாய்ந்த பயிற்சி. இந்த பயிற்சியானது எடையை குறைப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். எனவே இந்த நடைப்பயிற்சி முறையை நீங்கள் இன்றிலிருந்து தொடங்குங்கள். இந்த முறை உங்களை சுறுசுறுப்பாக வைக்க உதவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க
Winter Skincare : முகத்திற்கு லெமன் ஜுஸ் தடவலாமா? குளிர்கால சரும பராமரிப்பு 'இது' முக்கியம்