
பொதுவாக குழந்தை பெற்ற பிறகு குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளமாட்டார்கள். இதுவே, மன அழுத்தத்திற்குள் அவர்களை தள்ளிடும். சொல்லப்போனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்கள் தளர்ந்து போய் இருப்பார்கள். இதை தவிர்க்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவது மட்டுமல்லாமல், மசாஜ் செய்வதன் மூலமும் மனதையும், உடலையும் ரிலாக்ஸ் ஆக ஆக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே, இந்த பதிவில் குழந்தை பெற்ற பிறகு பெண்கள் மசாஜ் செய்வதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பிரசவத்திற்கு பிறகு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் :
பிரசவ சமயத்தில் பெண்ணிற்கு முதுகு, இடுப்பு, வயிறு தசைகள் அதிக அழுத்தத்திற்குள்ளாகும். மசாஜ் செய்தால் தசைகள் இறுக்கமாகும், வலிகள் குறையும். மேலும் தாயின் உடலானது பழைய நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பும்.
2. இரத்த ஓட்டம் மேம்படும்
குழந்தை பெற்ற பிறகு மசாஜ் செய்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். இதனால் உடல் சோர்வு நீங்கி, ஆற்றல் அதிகரிக்கும். மேலும் பிரசவ சமயத்தில் இழந்த சத்துக்களை உடலானது விரைவாக ஈடு செய்ய உதவும்.
3. வீக்கம் குறையும்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குறைக்க குறிப்பாக கை, கால்களில் உள்ள வீக்கத்தை குறைக்க மசாஜ் உதவுகிறது. இதனால் அதிகரித்துகளையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். இது தவிர, உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் மசாஜ் உதவுகிறது.
4. மன அழுத்தம்
பிரசவத்திற்கு பிறகு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக பெண்கள் அதிகமான அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இதை தவிர பதட்டமாகவும், சோர்வாகவும் இருப்பார்கள். மசாஜ் செய்வதன் மூலம் இந்த பிரச்சனையை குறைக்கலாம்.
5. ஸ்ட்ரெச் மார்க்குகள் நீங்க
குழந்தை பெற்ற பிறகு அடிவயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்க மசாஜ் பெரிதும் உதவுகிறது.
6. தூக்கத்தை மேம்படுத்தும்
குழந்தை பெற்ற பின் மசாஜ் செய்வதன் மூலம் உடல் மற்றும் மனம் தளர்த்தப்படுகிறது. இதனால் இரவில் நல்ல தரமான தூக்கத்தை பெறலாம்.
குறிப்பு :
பிரசவத்திற்கு பிறகு மசாஜ் செய்வது பெண்ணிற்கு நன்மை பயக்கும் என்றாலும், சிசேரியன் செய்தவர்கள் தையல் நன்கு காய்ந்து பிரியும் வரை காத்திருக்கவும். மேலும் மசாஜ் செய்த பிறகு சூடான நீரில் குளித்தால் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆகும்.