
பரபரப்பான இந்த காலத்தில் வெளியில் சென்று வீடு திரும்பினாலே அழுக்கான தோற்றத்திற்கு வந்துவிடுவோம். அழுக்கும், தூசியும் தலை முதல் பாதம் வரை ஒட்டியிருக்கும். இதனாலயே சிலர் தினமும் குளிக்கிறார்கள். சிலருக்கு சைனசிடிஸ் பிரச்சினை இருப்பதால் முகம், கை, கால்களை கழுவி விட்டு குளிப்பதை ஒத்தி வைக்கிறார்கள். நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள குளிப்பது அவசியம். என்றாலும், முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் குளிக்க வேண்டுமா? இதை இங்கு விரிவாக காணலாம்.
யார் தினமும் குளிக்க வேண்டும்?
நமது உடலமைப்பிற்கு தகுந்த மாதிரி முடியை பராமரிக்கும்போது தான் அதன் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். சிலருக்கு உச்சந்தலையில் அதிகமான எண்ணெய் பசை காணப்படும். அவர்கள் ஒரு நாள் குளிக்காவிட்டாலும், தலையில் எண்ணெய் பசையாக மாறிவிடும். இவர்கள் தினமும் குளிப்பது அவசியம்.
சிலருக்கு உச்சந்தலையில் அரிப்பு அல்லது பொடுகு இருக்கும். இவர்கள் தினமும் குளித்தால் அந்தப் பகுதியில் அழுக்கு சேராமல் பிரச்சினையின் தீவிரமும் குறையும். தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள், தொடர்ந்து வியர்வை வரும் நபர்கள் தினமும் குளிக்கலாம்.
யார் தினமும் குளிக்கக்கூடாது?
வறண்ட கூந்தல் உள்ளவர்கள் அடிக்கடி ஷாம்பூ போட்டு தலைக்கு குளித்தால் தலையில் உள்ள இயற்கை எண்ணெய்கள் நீக்கப்படும். இதனால் அவர்களின் தலைமுடி கூடுதலாக வறண்டு முடி உடைதல், உதிர்வு ஆகியவை ஏற்படும். இவர்கள் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குளித்தால் போதுமானது. அடிக்கடி குளிப்பது இவர்களுடைய கூந்தலுக்கு நல்லதல்ல. அரைக் குளியலாக மேனிக்கு மட்டும் குளிக்கலாம்.
குளிக்கும்போது செய்யக் கூடாத தவறுகள்