Head Lice : வெறும் பூண்டு போதும்!! பேன், ஈறு தொல்லையே இனி இருக்காது

Published : Nov 13, 2025, 04:33 PM IST
home remedies for head lice

சுருக்கம்

உங்கள் தலையில் பேன், ஈறு தொல்லை அதிகமாக இருந்தால் அவற்றை நிரந்தரமாக ஒழிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வீட்டு வைத்தியத்தை பின்பற்றினால் மட்டும் போதும்.

நம்முடைய கூந்தலில் அழகைக் கெடுப்பதில் பொடுகு மட்டுமல்ல, ஈறு, பேன்களும் பெரும் பங்கு வகிக்கின்றது. பேன்கள் நம்முடைய இரத்தத்தை உணவாக உறிஞ்சுகின்றது. அவை அதிவேகமாக இனப்பெருக்கம் செய்து நம்முடைய உச்சந்தலையில் முட்டையிட்டு அரிப்பு மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுகின்றது.

இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தலையில் இருக்கும் ஈறு, பேன் தொல்லைகளை நிரந்தரமாக விரட்டி எடுக்கலாம். அவை என்னென்ன? அவற்றை பயன்படுத்துவது எப்படி? என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

பேன், ஈறு தொல்லையை நிரந்தரமாக ஒழிக்க வீட்டு வாத்தியங்கள் :

1. வேப்பிலை எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து உச்சந் தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு எப்போதும் போல ஷாம்பு போட்டு குளிக்கவும். வாரத்திற்கு 3 முறை இப்படி செய்து வந்தால் ஈறு, பேன் தொல்லை நிரந்தரமாக தலையில் இருந்து நீங்கிவிடும்.

2. பேன் தொல்லை அதிகமாக இருந்தால் வேப்பிலையை அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்தால் நல்ல பலனை காண்பீர்கள்.

3. அதுபோல நீங்கள் தூங்கும் தலையணை மீது வேப்பிலை மற்றும் துளசி இலைகளை பரப்பி பிறகு அதன் மேல் ஒரு துணியை போட்டு தூங்கவும். இப்படி செய்தால் பேன் தொல்லை முற்றிலும் ஒழிந்து விடும்.

4. 2 ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து அதனுடன் அரை கப் தேங்காய் பால் மற்றும் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றி கலந்து அதை உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்தால் பேன், ஈறு தொல்லை நீங்கிவிடும்.

5. குப்பைமேனி இலையை அரைத்து அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து அதை உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு எப்போதும் போல குளித்தால், பேன் தொல்லை நீங்கும்.

6. பேன்களைக் கொல்லும் தன்மை உப்பிற்கு உண்டு. எனவே உப்பு நீரில் தலைக்கு குளித்தால் பேன்கள் அனைத்தும் செத்து மடியும்.

7. பேன்களுக்கு பூண்டின் வாசனை பிடிக்காது. எனவே பூண்டை அரைத்து அதை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் வைத்து பிறகு எப்போது போல ஷாம்பு போட்டு குளித்தால் பேன் தொல்லை முற்றிலும் ஒழிந்து விடும்.

8. சின்ன வெங்காயத்தை உரித்து அதிலிருந்து சாற்றை எடுத்து அதை உச்சந்தலையில் தடவி 5 நிமிடம் கழித்து பேன் சீப்பு கொண்டு வாரினால் பேன்கள் மற்றும் ஈறுகள் முற்றிலும் வெளியே வந்துவிடும். பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க
Winter Skincare : முகத்திற்கு லெமன் ஜுஸ் தடவலாமா? குளிர்கால சரும பராமரிப்பு 'இது' முக்கியம்