
ஆண்கள் பலருக்கு தாடி அதிகமாக்ம் வளர வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, மரபணு ரீதியான கோளாறுகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, தூக்கமின்மை, டெஸ்டோஸ்ரோன் ஹார்மோன் குறைவாக சுரத்தல், சருமத்தை சுத்தமாக வைக்காமல் இருத்தல் உள்ளிட்ட பல காரணமாக தாடி தாமதமாக வளர்கிறது. இது தவிர முகத்திற்கு போடும் கிரீம், சோப்பு, சுற்றுச்சூழல் போன்ற காரணங்களாலும் தாடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. சரி இப்போது இந்த பதிவில் தாடி வேகமாக வளர சூப்பரான சில டிப்ஸ்கள் குறித்து பார்க்கலாம்.
தாடி வேகமாக வளர டிப்ஸ்கள் :
1. புரோட்டின் உணவுகள் :
நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான் தாடி வளர்ச்சியில் தடைப்படாது. ஆகவே தாடி வேகமாகவும், அதிகமாகவும் வளர வேண்டும் என்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். குறிப்பாக்க புரோட்டின் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவையாகும்.
2. விளக்கெண்ணெய் மசாஜ் :
தாடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர விளக்கெண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள்.
3. நல்ல தூக்கம் :
தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு போதுமான அளவு தூங்கினால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். தாடி வளர்ச்சிக்கும் தூக்கம் மிகவும் அவசியம்.
4. மன அழுத்தம் :
மன அழுத்தம் அதிகமாக இருந்தால் தாடி வளர்ச்சி பாதிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் தலைமுடியும் நரைக்கும்.
5. தண்ணீர் குடிப்பது :
உடல் வறண்டு இருந்தால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
6. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் :
டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் ஆண்களுக்கு குறைவாக இருந்தால் தாடி வளர்ச்சி தடைப்படும். எனவே இந்த ஹார்மோனை அதிகரிக்க மீன், முட்டை, வேர்கடலை, எள் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்.
7. உடற்பயிற்சி :
தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இரத்த ஓட்டம் சீராக பரவும். இதனால் தாடியும் வேகமாக வளர ஆரம்பிக்கும்.
நினைவில் கொள் :
- அடிக்கடி தாடி வெட்டினாலோ அல்லது ஷேவ் செய்தாலோ தாடி வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
- அடிக்கடி முகத்தை கைகளால் தொடுவதை தவிர்ப்பது நல்லது.
- புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
- வாரத்திற்கு ஒரு முறை வெங்காய ஜூஸை தாடியில் தடவி வந்தால் தாடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
தாடி வளர்ப்பதன் நன்மைகள் :
- முகத்தில் இருக்கும் துவாரங்கள் வழியாக அழுக்குகள் படியாது. இதனால் சருமம் பாதிப்படையாது.
- சூரியனின் தீங்கு விளைவிக்கும் புறா ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை தாடிதான் பாதுகாக்கிறது.