
பூண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். இது காலம் காலமாக சிறந்த நோய் நீக்கியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பூண்டு மற்றும் அதன் தோலில் இருக்கும் அல்லிசின் என்னும் பண்பு பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரஸ் பண்புகளை கொண்டுள்ளன. முகத்தில் இருக்கும் வீக்கம், தோல் சிவத்தல் குறைக்க உதவுகிறது. இது தவிர இதில் இருக்கும் வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற பண்புகள் முகத்தில் எண்ணெய் சேருவதை தடுக்கவும், முகத்தை பொலிவாக வைக்கவும் உதவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், முகப்பருவை போக்க பூண்டை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முகப்பருவை நீக்க பூண்டை பயன்படுத்தும் முறை :
1. பூண்டு சாறு :
ஒரு புதிய பூண்டு பல்லை தோலுரித்து நசுக்கி சிறிது சுத்தமான தண்ணீரில் கலக்கவும். அதற்கு முன்னதாக உங்களது முகத்தை சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். இப்போது தயாரித்து வைத்த பூண்டு சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு சுத்தமான தண்ணீரை கழுவி விடுங்கள்.
2. பூண்டு மற்றும் தேன் :
இதற்கு பூண்டின் தோலை உரித்து நசுக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகப்பரு மீது தடவி 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். தேனில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முகப்பருவை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதில் அலர்ஜி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கவும், வயதான அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது.
3. பூண்டு மற்றும் மஞ்சள் ;
மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவை கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களை போக்க உதவும். மஞ்சளுடன் சிறிதளவு பூண்டு சாற்றை கலந்து பருக்கள் மீது தடவி வந்தால் விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
பூண்டு தோல் பயன்படுத்தும் முறைகள் :
- பூண்டு தோலை அரைத்து அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து அதை பருக்கள் மீது தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.
- பூண்டு தோலுடன் யோகார்டை சேர்த்து பேஸ்ட் போலாக்கி அதை பருக்கள் மீது தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரால் முகத்தை கழுவினால் தோல் வறண்டு இறுக்கமாகும்.
- பூண்டு தோல் மற்றும் தேன் இரண்டையும் அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து குலைத்து பருக்கள் மீது தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்.
மேலே சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களுக்கு தீர்வு கிடைக்கும். முகமும் அழகாகவும், பொலிவாகவும் மாறும்.
முக்கிய குறிப்பு : இது வெறும் தகவலுக்காக மட்டுமே. மருத்துவரிடம் ஆலோசிக்காமல் எந்தவொரு புதிய முயற்சியையும் செய்ய வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.