
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் அலுவலக வேலை அல்லது செல்போன் மோகம் காரணமாக இரவு நீண்ட நேரம் கண் விழித்து இருக்கிறார்கள். சொல்லப்போனால் ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், நீங்கள் இரவு சரியாக தூங்கவில்லை என்றால் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மோசமான பாதிப்பை ஏற்படும்.
நீங்கள் தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்களது உடலில் பல முக்கியமான அமைப்புகள் சீர்குலைந்து விடும். இதன் விளைவாக நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இத்தகைய சூழ்நிலையில், தினமும் இரவு 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் ஏற்படும் விளைவுகள் :
1. நீங்கள் தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இரட்டிப்பாகும் என்று ஆய்வுகள் சொல்லுகின்றது.
2. தினமும் குறைவாக தூங்குகிறீர்கள் என்றால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளன.
3. 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் பசியை தூண்டும் ஹார்மோன் அதிகரிக்கும். அதிகப்படியான பசி காரணமாக கண்ட நேரத்தில் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவோம். இதனால் உடலில் கொழுப்பு சேரும்.
4. ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கியவர்களுக்கு, 7-8 மணி நேரம் தூங்கியவர்களை விட இரத்தக்குழாயில் கொழுப்பு படிவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
5. நீங்கள் 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்கள் என்றால் மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.
6. ஆறு மணி நேரம் அல்லது அதற்கு குறைவாக தூங்கினால் மூளையில் நச்சுக்கோள் குவியும். பிறகு எதிர்காலத்தில் அறிவாற்றல் குறைபாடு அல்லது மறைவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளன.
7. நினைவாற்றல் குறைபாடு, முடிவெடுக்கும் திறன் குறைவு, கவன சிதறல் போன்றவையும் குறைந்த தூக்கத்தால் ஏற்படுகின்றது.
8. நீங்கள் இரவு சரியாக தூங்கவில்லை என்றால் மனசார்பு, கவலை, எதிர்மறையான உணர்வுகள், பயம், அதிக கோபம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுவீர்கள்.
9. தூக்கம் வரவில்லை என்று நீங்கள் தூக்கு மாத்திரை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஏற்படும்.
10. குறைவாக தூங்குபவர்கள் எதற்கு எடுத்தாலும் கோபப்படுவார்கள்.
11. தினமும் போதிய அளவு தூங்கவில்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
நல்ல தூக்கத்தை பெற ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என்கின்ற நிபுணர்கள். ஒரே நேரத்தில் தூங்குதல், ஆரோக்கியமான உணவு சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்த போன்றவற்றின் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம்.