கோடையில் கவனம்!! வெயில் காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் தெரியுமா? 

Published : Mar 06, 2025, 11:00 AM ISTUpdated : Mar 06, 2025, 11:03 AM IST
கோடையில் கவனம்!! வெயில் காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் தெரியுமா? 

சுருக்கம்

Foods To Avoid In Summer : கோடை காலத்தில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கோடை காலம் தொடங்கியாச்சு. இந்த பருவத்தில் உடலில் ஆரோக்கியமாக வைப்பது ரொம்பவே முக்கியம். இதற்கு உடலை நீரேற்றமாக வைப்பது மிகவும் அவசியம். உடலில் சிறிதளவு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் கூட பல உடல்நிலை பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். இதனால்தான் கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். அதுமட்டுமின்றி, கோடை காலத்தில் குளிர்ந்த உணவுகளை தான் நாம் அதிகமாக சாப்பிட விரும்புவோம். இருப்பினும் இந்த பருவத்தில் நாம் சாப்பிடும் உணவுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் கூட உடல் நலம் தான் பாதிக்கப்படும். இத்தகைய சூழ்நிலையில், கோடைகாலத்தில் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன. அவை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  இந்த '7' அறிகுறிகள் உடம்புல தெரிஞ்சா நீர்ச்சத்து குறைப்பாடுனு அர்த்தம்! நோட் பண்ணிக்கோங்க

கோடை காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள்:

1. வறுக்கப்பட்ட இறைச்சி

கோடை காலத்தில் சிலர் கிரில் செய்யப்பட்ட இறைச்சி உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் அது உங்களுக்கு தேவையானதை விட அதிகமான தீங்கு தான் விளைவிக்கும். இந்த உணவுகள் மிக அதிக வெப்ப நிலையில் சமைக்கப்படும். ஏற்கனவே அதிக வெப்பம் இருப்பதால் அதிக வெப்பத்தில் சமைக்கும் உணவு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதுதவிர இது புற்றுநோய் அபாயத்தையும் ஏற்படுத்தும்.

2. ஐஸ்கிரீம் 

கோடை காலத்தில் ஐஸ்கிரீம் நாம் அனைவரும் சாப்பிட விரும்புவோம். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என எல்லா வயதினரும் ஐஸ்கிரீமை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவோம். ஆனால் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் ஐஸ்கிரீமில் அதிக சர்க்கரை உள்ளதால் இது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை அதிகரிக்க செய்யும். ஒருவேளை நீங்கள் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பினால் அடிக்கடி சாப்பிடாமல் அவ்வப்போது மட்டுமே சாப்பிடுங்கள்.

3. ஆல்கஹால்

சிலர் கோடையில் குளிர்ந்த ஒயின் அல்லது ஐஸ் போட்ட மதுவை குடிக்க விரும்புவார்கள். ஆனால் இப்படி குடிப்பது உடல் வெப்பநிலையை அதிகரித்து நீரிழிப்பை ஏற்படுத்தும். மேலும் உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து நோய்வாய்ப்படும் அபாயம் அதிகரிக்கும்.

4. பால் பொருட்கள்

கோடையில் நீங்கள் அதிகமாக குளிர்ந்த மில்க் ஷேக் குடிக்க விரும்பினால் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஏனெனில் இந்த பருவத்தில் பால் பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த பருவத்தில் உடல் வெப்பம் காரணமாக பால் வெண்ணெய் அல்லது சீஸ் போன்ற பால் பொருட்கள் ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படும்.

5. எண்ணெய் உணவுகள்

எண்ணெய் உணவுகள், குப்பை உணவுகள், வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் கோடை காலத்தில் சாப்பிடுவது ஆரோக்கியமற்றது. அவை ஆரோக்கியத்திற்கு தீங்குதல் விளைவுக்கும். இவை உடலின் உள்ளே இருந்து வெப்பத்தை உருவாக்கும். இதன் காரணமாக முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடையத் தொடங்கும்.

இதையும் படிங்க:  Summer Tips : கோடையில் பால் கெட்டுப் போகாமல் தடுக்க நச்சுனு நாலு டிப்ஸ்!!

6. உலர் பழங்கள் 

பாதாம், உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், வால்நட் போன்ற உலர் பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும், அவை கோடை காலத்தில் சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உலர் பழங்கள் உடலை உள்ளிருந்து சூடேற்றம். எனவே கோடை காலத்தில் உலர் பழங்களை மிகவும் குறைவாகவே சாப்பிடுங்கள்.

7. டீ, காபி

பெரும்பாலானவர் காலை எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபி இல்லாமல் தங்களது நாளைத் தொடங்க மாட்டார்கள். உங்களுக்கும் இந்த பழக்கம் இருந்தால் அதை மாற்ற முயற்சி செய்யுங்கள். ஏனெனில் கோடை காலத்தில் டீ, காபி அதிகமாக குடிப்பது நல்லதல்ல. அதற்கு பதிலாக நீங்கள் கிரீன் டீ வேண்டுமானால் குடியுங்கள்.

8. மசாலா பொருட்கள்

ஏலக்க லவங்கப்பட்டை கிராம்பு கருப்பு மிளகு போன்ற வாசலா பொருட்கள் உணவின் சுவையை கூட்டும் இருப்பினும் இந்த மசாலா பொருட்களில் வெப்பம் மிக அதிகமாக இருப்பதால் கோடை காலத்தில் இதை சாப்பிட்டால் நீரிழப்புக்கு ஆளாகி, நோய்வாய்ப்படுவீர்கள். எனவே கோடையில் மசாலா பொருட்கள் அதிகமாக சேர்க்காத உணவுகளை சாப்பிடுங்கள்.

9. மாம்பழம் 

கோடை காலத்தில் மாம்பழம் விரும்பி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இருப்பினும் இது அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. கோடையில் அளவுக்கு அதிகமாக மாம்பழம் சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, தலைவலி ஏற்படும். எனவே குறைந்த அளவில் மட்டுமே சாப்பிடுங்கள்.

10. உப்பு

உப்பு நமது உணவில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தாலும் கோடையில் அதிக உப்பு சாப்பிடுவது வீக்கம், உயரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக அதிகப்படியான சோடியம் உடலில் சேரும்போது சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?