தக்காளி இல்லாமல் சுவையான சட்னி எப்படி அரைப்பது என்று பார்க்கலாம்.
இந்திய சமையலை பொறுத்த வரை தக்காளி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் தக்காளி விலை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இல்லத்தரசிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் தக்காளி இல்லாமல் எப்படி சமைப்பது என்று பலரும் கூகுளில் தேட தொடங்கிவிட்டனர். குழம்பு, சட்னி, ரசம் என எதுவாக இருந்தாலும் தக்காளி இல்லாமல் சமைக்க முடியாது. எனவே தக்காளி இல்லாமல் சுவையான சட்னி எப்படி அரைப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் – தேவையான அளவு
உளுத்தம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 3
பூண்டு – 15 முதல் 2 பல்
காய்ந்த மிளகாய் – 5
காஷ்மீரி மிளகாய் – 2
புளி – சிறிய உருண்டை
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய்
காய்ந்த மிளகாய் 1
கடுகு, உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து சூடேறிய பின், எண்ணெய் உளுத்தம் பருப்பை பொன்னிறமாக சேர்த்து வறுத்துக்கொள்ளவும். பின்னர் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். புளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி நன்கு ஆறிய பின், மிக்ஸியில் போட்டு அரைத்த் கொள்ளவும். பின்னர் தாளிப்பு சேர்த்தால் அருமையான தக்காளி இல்லாத கார சட்னி ரெடி. இந்த சட்னியை சூடான இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடலாம்.
கம கம மட்டன் கீ ரோஸ்ட் மசாலா செய்வது எப்படி?