உலகின் விலையுயர்ந்த மாம்பழத்தின் சிறப்புகள் குறித்த விளக்கம்.. ஒரு மாம்பழமே ரூ.19 ஆயிரம் என்றால் நம்பவது சிரமம் தான்.
கோடை காலம் வந்தாலே மாம்பழ சீசனும் சேர்ந்தே வரும். மாம்பழங்களின் தித்திப்பான சுவைக்கு பலரின் நாவுகளும் அடிமையாக இருக்கும். நம் ஊரில் ரூ.100, ரூ.200 என விற்பனையாகும் மாம்பழங்கள் ஜப்பானில் 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. இதுவே உலகின் விலையுர்ந்த மாம்பழமாக சொல்லப்படுகிறது. ஜப்பான் விவசாயி ஒருவர் மாம்பழங்களை ரூ.19 ஆயிரம் விலைக்கு கொடுக்கிறார்.
ஜப்பானை சேர்ந்த ஹிரோயுகி நககாவா தான் அந்த விவசாயி. இவர் 2011ஆம் ஆண்டிலிருந்து ஜப்பான் நாட்டின் வடக்குத் தீவின் குளிர்ந்த டோகாச்சி மாவட்டத்தில் மாம்பழம் பயிடுகிறார். இந்த மாம்பழங்கள் தான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்தவை. ஒவ்வொரு மாம்பழமும் $230 (ரூ. 18,892.78) வரை விற்கப்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள காலநிலை தான் மாம்பழங்களின் அதீத ருசிக்கு காரணமாம். இங்குள்ள பனியும், வெப்ப நீரூற்றுகளும் மாம்பழத்தின் சுவையை பல மடங்கு கூட்டுகின்றன. குளிரில் கிடைக்கும் பனியை சேமித்து கோடை வெப்பத்தில் மாமரங்களை பராமரிப்பாராம். குளிர்காலத்தில் வெப்ப நிரூற்றுகளை வைத்து சாகுபடி செய்துள்ளார். அடடே!
undefined
இதையும் படிங்க: கொய்யா இலைகள் உடல் எடையை குறைக்குமா? அட! என்னங்க இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கு!
முன்னதாக விவசாயி நககாவா (62), பெட்ரோலிய நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். எண்ணெய் தொழிலில் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, விலைவாசி உயர்வு காரணமாக பணியைவிட்டார். நாககாவா மாம்பழம் விவசாயத்திற்கு மாறினார். தனது சொந்த பண்ணையைத் தொடங்கினார். இவர் தனியனாக இதை செய்யவில்லை. மியாசாகியின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு மாம்பழ உற்பத்தியாளரின் உதவியுடன் பணிகளை செய்தார். மாம்பழ சீசன் இல்லாத காலத்தில் சுமார் 5 ஆயிரம் மாம்பழங்களை அறுவடை செய்கிறார். குளிர் காலங்களில் பூச்சி தாக்குதல் குறைவாக இருப்பதால் மாம்பழங்களுக்கு இரசாயனங்கள் தெளிப்பது தேவைப்படுவதில்லை. ஈரப்பதமான காலநிலை, எந்த பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் மாம்பழத்தை பழுக்க வைக்கிறார். இதனால் அவற்றிற்கு கூடுதல் சுவை உள்ளது.
2014 ஆம் ஆண்டு டோக்கியோவில் உள்ள இசெட்டன் பல்பொருள் அங்காடியில் அவரது மாம்பழம் விற்பனைக்கு வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 400 டாலர்களுக்கு விற்பனையானது. இப்போது அவருடைய ஒரு மாம்பழம் 230 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. அதாவது நம்மூர் மதிப்புக்கு கிட்டத்தட்ட ரூ.19 ஆயிரம். ஆனாலும் விவசாயி நககாவாவுக்கு இன்னும் திருப்தி அடையவில்லை. டோகாச்சியை குளிர்காலத்தில் பழ உற்பத்தி மையமாக மாற்றவும், சமூகத்தின் பொருளாதாரத்திற்கு உதவவும் அவர் நினைக்கிறார். அதே நுட்பத்தைப் பயன்படுத்தி மற்ற வெப்பமண்டல உணவுகளை வளர்க்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சம்மரில் லிச்சி பழம் சாப்பிட்டு பாருங்க! தித்திப்பு சுவையுடன் ஏராளமான அற்புத நன்மைகள் இருக்கு!