Paruppu Rasam In Tamil : இந்த கட்டுரையில் ருசியான மற்றும் ஆரோக்கியமான பருப்பு ரசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
உணவே மருந்து என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆம், அது உண்மைதான். எப்படியெனில், நாம் சாப்பிடும் உணவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை பொருட்கள் சேர்ப்பதால், அவை நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது. அவற்றில் ஒன்றுதான் ரசம். ரசத்தில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் பருப்பு ரசம். இந்த ரசம் முற்றிலும் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இப்போது இந்த சுவையான பருப்பு ரசம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
இதையும் படிங்க: சளி இருமலுக்கு அருமருந்து துளசி ரசம்.. எப்படி செய்யணும் தெரியுமா?
undefined
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப் (வேகவைத்து எடுத்தது)
தக்காளி - 1
புளிசாறு - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 5
ரச பொடி - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
வரமிளகாய் - 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: சும்மா ஒரே மாதிரி ரசம் செய்யாம ஒரு தடவ கமகமன்னு வாசனை வரும் வாழை இலை வைத்து ரசம் செய்து சாப்பிடுங்க!
செய்முறை:
பருப்பு ரசம் செய்ய முதலில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வரமிளகாய், சீரகம் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கி வைத்த தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் ரசப்பொடி தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அதன் பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர், புளிசாறு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். இதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும். இதனை அடுத்து, வேகவைத்து எடுத்துள்ள பருப்பை நன்கு மசித்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடுங்கள். ரசம் நன்கு கொதித்த பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் பருப்பு ரசம் ரெடி. இந்த பருப்பு ரசத்தை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D