சர்க்கரை இல்லா பேரிச்சை ஓட்ஸ் லட்டு... சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம்

Published : Mar 10, 2025, 09:13 PM IST
சர்க்கரை இல்லா பேரிச்சை ஓட்ஸ் லட்டு... சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம்

சுருக்கம்

இனிப்பான உணவுகள் என்றாலே சர்க்கரை நோயாளிகள் சார்ப்பிடக் கூடாத உணவுகள் என்றாகி விட்டது. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாமல் சாப்பிடக் கூடிய ஆரோக்கியமான இனிப்பு லட்டு செய்வது எப்படி என வாங்க தெரிந்து கொள்ளலாம். இது இனிப்பு சேர்க்க வேண்டிய அவசியமே கிடையாது. 

இன்றைய வாழ்க்கை முறையில் சர்க்கரை நோய் ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இனிப்பு உணவுகளை தவிர்க்கும் சூழ்நிலையில், இயற்கை இனிப்புகளால் செய்யப்படும் ஆரோக்கியமான உணவுகள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது "சர்க்கரை இல்லா பேரிச்சை ஓட்ஸ் லட்டு". இதில் சர்க்கரை, செயற்கை இனிப்பு எதுவும் சேர்க்கப்படாமல், இயற்கையாகவே நிறைய நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் புரதம் கொண்டுள்ளது. இந்த ஓட்ஸ் லட்டு, நீரிழிவு நோயாளிகள், உடல் எடை குறைக்க விரும்பும்வர்கள், குழந்தைகள் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சிறந்த ஆரோக்கிய உணவாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ்  – 1 கப் 
பேரிச்சம்பழம் – 10 முதல் 12
பாதாம் – 10
வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 5
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் / நெய்  – 1 டீஸ்பூன் (விருப்பத்திற்கேற்ப)
தேங்காய் துருவல்  – 2 தேக்கரண்டி (தேவைப்பட்டால்)

உங்கள் கோதுமை மாவு சுத்தமானது தானா? ஒரிஜினலை கண்டுபிடிக்க ஈஸி வழிகள்

செய்முறை :

- ஒரு கடாயில் ஓட்ஸை மிதமான சூட்டில் பழுப்பு நிறம் அடையும் வரை வறுக்கவும்.
- இதை மிக்ஸியில் மெல்லிய தூளாக அரைத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் பாதாம், முந்திரி, வேர்க்கடலையை சிறிது நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.
- இதை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளலாம் அல்லது மிக்ஸியில் 2-3 நொடிகள் மட்டும் அரைக்கலாம்.
- பேரிச்சம்பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த ஓட்ஸ், பாதாம், வேர்க்கடலை, முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- பின்னர் பேரிச்சை பேஸ்ட் சேர்த்து, கை கொண்டு நன்றாக குழைத்துக் கொள்ளவும்.
- தேவையானால் 1 தேக்கரண்டி நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்க்கலாம். இது லட்டு உருட்ட எளிதாகும்.
- இதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- குளிர்ச்சியாக ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் இது இன்னும் சுவையாக இருக்கும்.
- காலை உணவாக அல்லது டீ-டைம் ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.
- குழந்தைகளுக்கு பேக்கிங் ஸ்நாக்ஸ் ஆகவும் பயன்படுத்தலாம்.
- சர்க்கரை நோயாளிகள் மாலையில் சிறிய இடைவேளையில்சாப்பிடலாம்.

ஆரோக்கிய நன்மைகள்:

-  பேரிச்சை மூலம் இயற்கை இனிப்பு கிடைக்கும்.
- நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்தும் நபர்களுக்கு ஏற்றது.
- ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
- பாதாம் மற்றும் வேர்க்கடலை உடலுக்கு நல்ல கொழுப்பு மற்றும் புரதம் தரும்.
- ஏலக்காய் மற்றும் தேங்காய் சேர்ப்பதால் நறுமணம் மற்றும் சுவை அதிகரிக்கும்.
- மாலை நேர சிற்றுண்டி ஆக சிறந்த தேர்வு.

அடடோ...காலையில் வெறும் வயிற்றில் வாக்கிங் போனா இவ்வளவு நல்லதா?

சுவையை அதிகரிக்க டிப்ஸ் :

- மிக்ஸியில் ஓட்ஸை மிக மெல்லிய தூளாக அரைக்க வேண்டாம் .
- தேங்காய் துருவல் சேர்க்கும் போது, பச்சையாக சேர்க்காமல் லேசாக வறுத்தால் நீண்ட நாள் வைத்திருக்கலாம்.
- வாரத்திற்கு 2-3 நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்தால், சுவை நீடிக்கும்.
- செயற்கை இனிப்பு சேர்க்க வேண்டாம். பேரிச்சை போதுமானது.
- நெய் பயன்படுத்தாமல் செய்யலாம். நல்லெண்ணெய் சிறந்த மாற்று.

PREV
click me!

Recommended Stories

பானிபூரி சாப்பிட முயன்ற பெண் திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு.. ஷாக்கிங் வீடியோ!
சாம்பாரை கண்டுபிடித்த ஊர் தஞ்சாவூர்..! சசி தரூர் சொன்ன சாப்பாட்டு மேட்டர்!