அஸ்வகந்தா மருத்துவ பயன்கள் ஏராளம்.. ஆனா அதிகமா சேர்த்தால்.. இந்த பக்க விளைவுகள் இருக்கு!

By Ma riya  |  First Published Apr 20, 2023, 7:20 PM IST

அஸ்வகந்தா அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பக்க விளைவுகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 


ஆயுர்வேதத்தின்படி இயற்கையில் கிடைக்கும் மூலிகைகள் உடலுக்கு வலுவூட்டக்கூடியவை. அந்த வரிசையில் அஸ்வகந்தா, குதிரை பலத்தை நமக்கு தரக்கூடிய மூலிகை என்பார்கள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு அஸ்வகந்தா நல்ல பலனை தரும். ஆனால் அதிகமான அளவில் அஸ்வகந்தா எடுத்துக் கொள்ளும் போது உடலில் சில பக்கவிளைவுகள் ஏற்படும் என கூறப்படுகிறது. முறையான மருத்துவ பரிந்துரை இல்லாமல் அஸ்வகந்தா மூலிகையை சாப்பிடக்கூடாது. ஏனெனில் சில மருந்துகளுடன் அஸ்வகந்தா வினையாற்றும் பண்பு கொண்டது. 

தைராய்டு, கொலஸ்ட்ரால் பிரச்சனை, கல்லீரல் நோய்கள், ஆட்டோ இம்யூன் நோய் போன்றவைகளுக்கு மருந்து உண்பவர்கள் அஸ்வகந்தா எடுத்துக்கொள்ளும்போது பக்க விளைவுகள் ஏற்படலாம். அதனால் அஸ்வகந்தா சாப்பிடுபவர்கள் முறையான மருத்துவ பரிசோதனையோடு மட்டுமே உண்ண வேண்டும். 

Tap to resize

Latest Videos

அஸ்வகந்தா பக்கவிளைவுகள்!!

  1. உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்களுக்கு அஸ்வகந்தா நிவாரணம் அளிக்கும். ஆனாலும், இயல்பான ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது பக்க விளைவுகளை உண்டாக்கலாம். ஏனென்றால் அஸ்வகந்தாவுக்கு ரத்த அழுத்தத்தை குறைக்கும் பண்பு இயல்பிலேயே உள்ளது. 
  2. நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டும் பண்பு கொண்டது அஸ்வகந்தா. இதனை உண்ணும் போது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உண்டாக்கும் விளைவுகளின் எதிர்வினையாக, நமக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்படும். ஏற்கனவே சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருப்பவர்கள் அஸ்வகந்தா சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 
  3. அஸ்வகந்தா மூலிகை ரத்த கசிவு பிரச்சனையை உண்டு செய்யலாம். அதனால் இரத்தக் கசிவு பிரச்சனை உள்ளவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது. ரத்தம் சார்ந்த பிற பிரச்சனைகள் இருப்பவர்களும் இதனை தவிர்க்கலாம். அஸ்வகந்தா உண்ணும் சிலருக்கு உடலில் உஷ்ணம் அதிகமாகும் வாய்ப்புள்ளது. அதன் பின்னர் உடலுடைய இயல்பு வெப்ப நிலைக்கு வருவதற்கு சில தினங்கள் கூட ஆகலாம். ஏற்கனவே காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தா உண்பதற்கு முன்பு மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். 
  4. அஸ்வகந்தா சாப்பிடும் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம் தோளில் தடிப்புகள் அரிப்பு போன்ற தோல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு நுரையீரல் போன்ற உள்ளுறுப்பு அழற்சி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இதயத்தில் வலி, சுவாசிப்பதில் சிரமம் ஆகியவையும் ஏற்படலாம். 
  5. ஆண்கள் அஸ்வகந்தாவை அடிக்கடி உண்பதால் பாலியல் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு விறைப்புக் கோளாறு வரலாம். அஸ்வகந்தா பாலுணர்வை தூண்டும் மூலிகை என்று சொன்னாலும், அதை அடிக்கடி உண்ணும் போது விறைப்பு கோளாறு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு தகவல்களுக்கும் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏதுமில்லை. 
  6. அடிக்கடி அஸ்வகந்தா சாப்பிடுபவர்களுக்கு இரைப்பை, குடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படலாம். சிலருக்கு ஒவ்வாமையும் மலச்சிக்கலும் ஏற்படும். 
  7. ​அஸ்வகந்தாவில் தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பை அதிகமாக்கும் பண்புகள் உள்ளன. இதன் காரணமாக சிலருக்கு ஹைப்பர் தைராய்டு பிரச்சனை ஏற்படலாம். 
  8. ​சர்க்கரை நோயாளிகள் அஸ்வகந்தா உண்ணும் போது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ஆனாலும் அடிக்கடி சாப்பிடும் போது திடீரென ரத்தத்தின் சர்க்கரை அளவு குறைய நேரிடும். இதனால் பதற்றம், மயக்கம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். 
  9. கருவுற்ற பெண்கள் அஸ்வகந்தா உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் சிலருக்கு கருச்சிதைவு கூட ஏற்படலாம் நிறைமாதத்தில் அஸ்வகந்தா உண்பவர்களுக்கு பிரசவ காலத்தில் சிரமம் ஏற்படலாம். 
  10. மருத்துவரின் முறையான பரிந்துரை ஏதும் இல்லாமல், அஸ்வகந்தா பொடி, அஸ்வகந்தா சப்ளிமெண்டுகள் உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

இதையும் படிங்க: வெயில்ல அசிடிட்டி நெஞ்சு எரிச்சல் வருவதை தவிர்க்கணும்னா இதை கண்டிப்பா சாப்பிடுங்க!

இதையும் படிங்க: தேங்காய் நார் வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாம்! இனிமேல் மறந்தும் தூக்கி போடாதீங்க! செம்ம டிப்ஸ்!!

click me!