எப்போதும் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டு போரிங்கா? அப்போ வெண்டைக்காய் வைத்து மொறுமொறுன்னு சிப்ஸ் பண்ணுங்க!

By Asianet Tamil  |  First Published Apr 20, 2023, 2:13 PM IST

வாருங்கள்! மொறுமொறுவென இருக்கும் வெண்டைக்காய் சிப்ஸ் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் காணலாம். 


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருப்பார்கள். இவர்களுக்கு ஏதேனும் ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கணும் என்று நினைத்தால் இப்படி வெண்டைக்காய் வைத்து சூப்பரான மொறுமொறுவென இருக்கும் சிப்ஸ் செய்து கொடுங்க . மடமடவென்று அனைத்தும் காலியாகி விடும் .

பொதுவாக சிப்ஸ் என்றால் பலரும் உருளைக்கிழங்கு ,மரவள்ளிக்கிழங்கு போன்றவை வைத்து தான் அதிகமாக சிப்ஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதையே எப்போதும் செய்யாமல் இப்படி ஒரு தடவ வெண்டைக்காய் வைத்து சூப்பரான சுவையில் இந்த சிப்ஸ் செய்து பாருங்க. இதனை 1 முறை செய்தால் இனி வெண்டைக்காய் வாங்கும் போது எல்லாம் இதனை மட்டும் தான் செய்து தர வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள் . 

வாருங்கள்! மொறுமொறுவென இருக்கும் வெண்டைக்காய் சிப்ஸ் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் காணலாம். 

தேவையான பொருட்கள் :

பிஞ்சு வெண்டைக்காய் - 20
கடலை மாவு - 3 ஸ்பூன்
கார்ன் ஃபிளார் - 1/4 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெண்டைக்காயை தண்ணீரில் அலசி விட்டு துணியால் நன்றாக துடைத்து விட்டு,ஒரே மாதிரியான அளவில் நீட்ட நீட்டமாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயில் தண்ணீர் சிறிதும் கூட இருத்தல் கூடாது.


1 பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள வெண்டைக்காயை போட்டுக் கொண்டு அதில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் கார்ன் பிளார் ஆகியவை சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு தூவி சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக கிளறி விட்டு சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின்னர், அதில் ஊற வைத்துள்ள வெண்டைக்காய்களை சிறிது சிறிதாக தூவி அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட வேண்டும்.

வெண்டைக்காய் நன்றாக பொரிந்த பின்னர் கடாயில் இருந்து எடுத்து எண்ணெய் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொண்டால் மொறுமொறு வெண்டைக்காய் சிப்ஸ் ரெடி! 

Tap to resize

Latest Videos

11 நாட்கள் இந்த பூஜை செய்து பாருங்க! பணக்கஷ்டமும், வறுமையும் உங்கள் வீட்டை விட்டு ஓடும்.

click me!