முட்டையை சூடுபடுத்தி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!!

By Kalai Selvi  |  First Published Jun 25, 2023, 4:00 PM IST

முட்டையை இரண்டாம் முறை சூடுபடுத்தி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.


நம்முடைய முன்னோர்கள் உணவை எப்போதும் சுட சுட சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பழைய உணவுகளை குளிர்சாதனையைப் பெட்டியில் வைத்து சூடு படுத்தி சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு நாம் சாப்பிட்டால் நம் உடலுக்கு பலவித தீங்குகளை விளைவிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த வகையில் இப்பதிவில் நாம் முட்டையை சூடு படுத்தி சாப்பிடுவது நல்லதா என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு சூடு படுத்தி சாப்பிட்டால் அது எந்த மாதிரியான விளைவுகளை நம் உடலுக்கு ஏற்படுத்தும் என்பதை குறித்தும் பார்க்கலாம்.

முட்டை நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் புரதம் நிறைந்துள்ளதால் அவை நம் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இதில் நம் இதயத்திற்கு தேவையான வைட்டமின்கள் இதில் உள்ளது. இவ்வாறு சொல்லிக் கொண்டு போகும் அளவிற்கு முட்டையில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளது. எனவே முட்டையை சூடு படுத்தி சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகளை குறித்து பார்க்கலாம் வாங்க.

Latest Videos

undefined

நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ளது. குறிப்பாக முட்டையில் புரதம் நிறைந்துள்ளதால் அவை எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் விட்டமின் டி மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே, முட்டையை சூடு படுத்தி சாப்பிடக்கூடாது.

இதையும் படிங்க: ஒரு மாதம் அரிசி சோறு சாப்பிடாவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும்? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க..!
 
மேலும் கோழிக்கறியில் சால்மோனெல்லா பாக்டீரியா தங்கி இருப்பதால், இவற்றை சூடுபடுத்தி சாப்பிடும் போது அவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதேபோலவே பீட்ரூட், பசலைக்கீரையில் நைட்ரிக் ஆக்சைடு நிறைந்துள்ளதால்,இவற்றையும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. இல்லையெனில் புற்றுநோயை உண்டாகும் வேதிப்பொருட்களை உருவாக்கும்.

click me!