உணவு அலர்ஜி ஆவதற்கும், உணவை உடல் சகித்து கொள்ளாமல் போவதற்கும் என்ன வித்தியாசம் என்பதை இங்கு காணலாம்.
நம் வாழ்க்கையே உணவை சார்ந்து தான் இருக்கிறது. இதனிடையே நாம் சாப்பிடும் சில உணவுகளுக்கு உடல் ரீதியான எதிர்வினைகள் பொதுவானது. உணவு ஒவ்வாமையை விட உணவு சகிப்புத்தன்மையால் தான் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. சிலருக்கு சில உணவுகள் ஒத்து கொள்ளாது. கொஞ்சமாக உண்பதால் கூட அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால் உணவு சகிப்புத்தன்மை தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு உணவின் பெரும்பகுதியை உண்ணும் வரை அல்லது அந்த உணவை அடிக்கடி சாப்பிடும் வரை அறிகுறிகள் வெளிப்படாது.
உணவு ஒவ்வாமை (Food allergy) என்றால் என்ன?
நமது நோயெதிர்ப்பு மண்டலம் பாக்டீரியா, பூஞ்சை அல்லது வைரஸ் போன்றவைக்கு எதிராக போராடி உடலைப் பாதுகாக்கும். ஒரு நபருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டால், அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு உணவை விரோதமாகப் பார்க்கிறது. உடலின் பாதுகாப்பு அமைப்பு செயல்படத் தொடங்குகிறது. எனவே, உணவு ஒவ்வாமை என்பது ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட்ட உடனேயே ஏற்படும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினை. இத்தகைய எதிர்வினைகள் IgE மத்தியஸ்த எதிர்வினைகள் எனவும் குறிப்பிடப்படுகின்றன.
உணவு ஒவ்வாமைக்கான அறிகுறிகள்:
உணவு சகிப்புத்தன்மை (Food tolerance) என்றால் என்ன?
பாலில் காணப்படும் சர்க்கரையான லாக்டோஸ் போன்ற உணவின் ஒரு குறிப்பிட்ட கூறுகளை உடலால் ஜீரணிக்க முடியாதபோது சகிப்புத்தன்மை ஏற்படுகிறது. எனவே, உணவு சகிப்புத்தன்மை செரிமான மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனை.
உணவு சகிப்புத்தன்மை அறிகுறிகள்:
முகம் பொலிவு பெற மாதவிடாய் இரத்தத்தில் பேசியல் செய்யலாமா?
உணவு ஒவ்வாமை vs உணவு சகிப்புத்தன்மை:
உணவு ஒவ்வாமை மற்றும் உணவு சகிப்புத்தன்மை என்பது முற்றிலும் வேறுபட்ட உடல்நல பிரச்சனைகள். உணவு ஒவ்வாமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் உள்ள வித்தியாசம் உடலில் நடக்கும் எதிர்வினைகள் தான். உங்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டால், உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு எதிர்வினையை ஏற்படுத்துகிறது. அதுவே உணவு சகிப்புத்தன்மை இருந்தால், செரிமான அமைப்பால் எதிர்வினை தூண்டப்படுகிறது.
எப்படி தடுப்பது?
இந்த ஒவ்வாமையை தடுப்பது கடினம் அல்ல. நோய் கண்டறியப்பட்டவுடன், உங்களுக்கு ஒத்து வராத உணவுகளை கண்டறிந்து அவற்றை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். வெளியே உணவு சாப்பிடும்போது கவனமாக உணவை தேர்ந்தெடுங்கள்.
இதையும் படிங்க: காலையில் இந்த 3 விஷயங்களை செய்தால் உடல் எடை ஆயுளுக்கும் அதிகரிக்காது... ஒரு நோய் வராமல் விரட்டி அடிக்கலாம்!!