Latest Videos

குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் கொடுப்பது என்று குழப்பமா? இந்த ஈஸியான ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..

By Ramya sFirst Published Aug 4, 2023, 4:04 PM IST
Highlights

குழந்தைகளுக்கு பிடித்த உணவை கொடுக்கும் அதே நேரம் அது ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். எ

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது, அதே போல் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது அவர்களுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்பது தான் அனைத்து அம்மாக்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய குழப்பம். குழந்தைகளுக்கு பிடித்த உணவை கொடுக்கும் அதே நேரம் அது ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். எனவே இந்த ஈஸியான டேஸ்டியான போஹா நக்கெட்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

1 கப் அவல்

உருளைக்கிழங்கு – 3 வேகவைத்தது

கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்

கார்ன்ஃப்ளார் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது

பச்சை மிள்காய் – பொடியாக நறுக்கியது

சீரக தூள் – 1 ஸ்பூன்

பிரெட் க்ரம்ஸ் – அரை கப்

செய்முறை :

முதலில் அவலை தண்ணீரில் நன்கு கழுவி அதை சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும். பின்னர் அவல் கடலைமாவு, கார்ன்ஃப்ளார், உப்பு சீரகத்தூள், மிளகாய் தூள், பூண்டு, பச்சை மிளகாய் கொத்தமல்லி இழை ஆகியவற்றை சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும்.

பின்னர் வடை பிசையும் பதத்திற்கு வந்ததும், சிறியதாக நக்கெட் வடிவத்தில் செய்து அதை பிரட் கிரம்ஸில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும். பின்னர் வாணலியை எண்ணெயை சூடாக்கி அதில் செய்து வைத்த அவல் நக்கெட்களை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். அவ்வளவு டேஸ்டியான அவல் நக்கெட்ஸ் ரெடி. கெட்ச் அப் அல்லது புதினா சட்னியுடன் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.

இப்படி ஒருமுறை முட்டை புலாவ் ட்ரை பண்ணி பாருங்க.. சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இதோ..

click me!