இப்படி ஒருமுறை முட்டை புலாவ் ட்ரை பண்ணி பாருங்க.. சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இதோ..

By Ramya s  |  First Published Aug 3, 2023, 3:37 PM IST

வித்தியாசமாகவும், சத்தாகவும் இருக்கும் வகையில் உணவு கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் தாய்மார்களுக்கு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இதோ.


பொதுவாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும் என்று யோசிப்பதே பெரிய தலைவலியாக இருக்கும். ஒரே மாதிரியான உணவுகளை கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள். வித்தியாசமாகவும், சத்தாகவும் இருக்கும் வகையில் உணவு கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் தாய்மார்களுக்கு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இதோ. இப்படி ஒருமுறை முட்டை புலாவ் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

Tap to resize

Latest Videos

15 முந்திரி பருப்பு

பட்டை

கிராம்பு

ஏலக்காய்

3 டேபிள் ஸ்பூன் தயிர்

பச்சை மிளகாய் – 3

கொத்தமல்லி

புதினா

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் பொடி – அரை ஸ்பூன்

தக்காளி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

பால் – அரை கப்

பாஸ்மதி அரிசி – 1 கப்

செய்முறை :

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி பருப்பு, பட்டை, லவங்கம், கிராம்பு, தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து அரைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அதில் வேகவைத்த முட்டைகளை போட்டு வறுக்க வேண்டும். அதை ஒரு தட்டில் மாற்றிவிட்டு, அதே பாத்திரத்தில் கூடுதலாக எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி ஆகியவற்றை வதக்கி, புதினா, கொத்தமல்லியை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்படி வதக்கவும். பின்னர் ஒரு கப் பால், அரிசிக்கு தேவையான ஊற்றி கொதிக்க விடவும். அதில் பாஸ்மதி அரசியை சேர்த்து வேக விட வேண்டும். கடைசியாக வறுத்த முட்டைகளை அதில் சேர்த்து மெதுவாக கிளறவும். அவ்வளவு தான் சுவையான உடுப்பி ஸ்டைல் முட்டை புலாவ் ரெடி. இந்த முட்டை புலாவை குழந்தைகள் மட்டுமின்றி வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவர். 

 

பழைய சப்பாத்தியில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? ரத்தம் அழுத்தம் குறையும், உடல் சூடு குறையுமாம்!!

click me!