பழைய சப்பாத்தியில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? ரத்தம் அழுத்தம் குறையும், உடல் சூடு குறையுமாம்!!

By Dhanalakshmi G  |  First Published Aug 3, 2023, 3:21 PM IST

பழைய சோறு எவ்வளவு நல்லதோ அதேமாதிரி பழைய சப்பாத்தியும் உடம்புக்கு நல்லதாம். இதில்தான் ஏராளமான சத்துக்கள் கொட்டிக் கிடக்கிறதாம்.


பழைய சப்பாத்தியில் அப்படி என்னதான் சத்துக்கள் கொட்டிக் கிடக்கிறது என்று பார்க்கலாம். பழைய சோற்றில் பி வைட்டமின் அதிகமாக இருக்கும். இந்த சத்து உடம்புக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுவதை கேட்டு இருக்கிறோம். 

இந்த பழைய சப்பாத்தியை சரியான முறையில் சர்க்கரை வியாதி இருப்பவர்கள் எடுத்துக் கொண்டாலும் நல்லதாம். ஜீரணத்துக்கு நல்லது. சப்பாத்தி செய்து முடித்து 12 முதல் 15 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். நல்ல பயன்களைப் பெறுவதற்கு ஃபிரிட்ஜில் வைக்கலாம்.  இங்கு நாம் பழைய சப்பாத்தி பற்றி தான் பேசுகிறோமே தவிர ''கெட்டுப் போன சப்பாத்தி'' இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Latest Videos

undefined

நார்ச்சத்து:
பழைய சப்பாத்தியில் தான் அதிகளவு நார்ச்சத்து இருக்கிறது. இந்த நார்ச்சத்து ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான ஒன்று. ஆரோக்கியமான வாழ்வுக்கு மட்டுமின்றி, எளிதாக ஜீரணிப்பதற்கு, குடலுக்கு மிகவும் நல்லது. உடனடியாக செய்த சப்பாத்தியில் இருப்பதைவிட பழைய சப்பாத்தியில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். நேரம் ஆக ஆக சப்பாத்தியில் இருக்கும் ஸ்டார்ச் உடைந்து நார்ச்சத்தாக மாறிவிடும். எனவே, நார்ச்சத்து தேவைக்கு பழைய சப்பாத்தி ஏற்றது. 

கேரள ஸ்டைல் பச்சை மாங்காய் மீன் குழம்பு ரெசிபி - பச்சை மாங்காய் நன்மைகள் அப்படியே கிடைக்கும்!!

கலோரி குறைவாக இருக்கும்:
சப்பாத்தியை செய்த உடனே சாப்பிட்டால் அதில் அதிகளவில் கலோரி இருக்கும். ஆனால், நேரம் ஆக ஆக சப்பாத்தியில் இருக்கும் ஸ்டார்ச் உடைந்து கலோரியை குறைத்துவிடும். இதனால்தான், எடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு பழைய சப்பாத்தி ஏற்றது.

எளிதில் ஜீரணிக்கும்:
வைத்து இருந்து சாப்பிடும் சப்பாத்திகளில் இருக்கும் நார்ச்சத்து உடைந்து விடுவதால் ஜீரணம் எளிதில் நடக்கும். உடலுக்கும் எளிதாக சப்பாத்தியை ஜீரணித்து சத்துக்களை எடுத்துக் கொள்ள உதவும். சிலருக்கு ஜீரணக் கோளாறு இருக்கும். சிலருக்கு குடல் மிகவும் சென்சிடிவ் ஆக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த சப்பாத்தியை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பழைய சப்பாத்திகளை சாண்ட்விச் மாதிரியும் செய்து சாப்பிடலாம். 

காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவது நல்லதா? என்னனென்ன நன்மைகள் கிடைக்கும்?

ரத்த அழுத்தம் குறையும்: 
பழைய சப்பாத்தியை குளிர்ந்த பாலுடன் சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உதவும்.  பழைய சப்பாத்தியை குளிர்ந்த பாலில் ஊறவைத்து 10 நிமிடங்கள் கழித்து சாப்பிடவும். இதை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் 

உடல் சூட்டை தணிக்கும்:
உடலின் நார்மல் வெப்பம் 37 டிகிரி செல்சியஸ். 40 டிகிரிக்கு சென்றால் உடம்பின் முக்கிய உறுப்புகளை பாதிக்கும். எனவே, பழைய சப்பாத்தியை குளிர்ந்த பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் உடம்பில் இருக்கும் சூடு தணியும். காலையில் இந்த முறையில் முதல் உணவாக எடுத்துக் கொண்டால் நல்ல சத்துக்களை கொடுப்பதுடன், உடம்பில் சூட்டையும் சரி செய்யும்.

click me!