இட்லி தோசைக்கு ஒருமுறை இந்த குருமா செஞ்சு சாப்பிடுங்க.. செம்மையா இருக்கும்!!

Published : Aug 08, 2024, 07:30 AM IST
இட்லி தோசைக்கு ஒருமுறை இந்த குருமா செஞ்சு சாப்பிடுங்க.. செம்மையா இருக்கும்!!

சுருக்கம்

Vellai Kurma Recipe : இந்த கட்டுரையில் ப்ளைன் வெள்ளை குருமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்

தினமும் இட்லி தோசைக்கு சட்னி, சாம்பார் சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் ஏதாவது சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது. இன்று காலை உங்கள் வீட்டில் தோசை அல்லது இட்லி செய்ய போகிறீர்கள் என்றால், அதற்கு சைட் டிஷாக ப்ளைன் வெள்ளை குருமா செய்து சாப்பிடுங்கள். இந்த குருமா சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். முக்கியமாக இந்த குருமா உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பும் சாப்பிடும் வகையில் அருமையாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் ப்ளைன் வெள்ளை குருமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  மலபார் ஸ்டைலில் ருசியான மட்டன் குருமா செய்யலாம் வாங்க!

ப்ளைன் வெள்ளை குருமா செய்ய தேவையான பொருட்கள்:

தேங்காய் - 3/4 கப் (துருவியது)
இஞ்சி - 3 துண்டு
பூண்டு - 7
கசகசா - 1 ஸ்பூன் ( சுடுநீரில் ஊற வைத்தது)
முந்திரி - 10 ( முந்திரி இல்லை என்றால் பொட்டுக்கடலை சிறிதளவு)
சோம்பு - 1 ஸ்பூன்
கிராம்பு - 5
பட்டை - 2 துண்டு
அன்னாசிப்பூ - 1
கல்பாசி - சிறிதளவு
பிரியாணி இலை - 1
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  கொழுப்பை கரைத்து, உடல் பருமனை குறைக்க உதவும் "கொள்ளு குருமா"!

செய்முறை: 

ப்ளைன் வெள்ளை குருமா செய்ய முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், இஞ்சி, பூண்டு, கசகசா, முந்திரி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, அன்னாச்சி பூ, கல்பாசி, பிரியாணி இலை, சோம்பு, ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். பின் அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் அதில் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இப்போது குருமாவிற்கு தேவையான அளவு தண்ணீரை அதில் ஊற்றவும். இதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சுமார் 5 நிமிடம் குருமாவை கொதிக்க வைக்கவும். இறுதியாக, பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் வெள்ளை குருமா ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Cooking Oil: பஜ்ஜி, பூரி சுட்ட எண்ணெய் கறுப்பா இருக்கா? 1 நிமிஷத்துல இப்படி சுத்தம் பண்ணுங்க!
Magnesium Rich Fruits: இதய ஆரோக்கியத்திற்கு உதவும் 7 மெக்னீசியம் நிறைந்த பழங்கள் லிஸ்ட்