ஈவினிங் டைம்ல டீக்கு மீல்மேக்கர் வச்சி இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!

By Kalai Selvi  |  First Published Aug 7, 2024, 5:12 PM IST

Meal Maker Vadai Recipe : இந்த பதிவில் மீல் மேக்கர் வடை  வடை செய்வது எப்படி  என்று தெரிந்து கொள்ளலாம்.


பொதுவாகவே, நாம் மீல்மேக்கரை வைத்து பிரியாணி, குருமா, கிரேவி, ஃப்ரை என இதுபோன்ற பல ரெசிபிகளை தான் நாம் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால், நீங்கள் மீல் மேக்கரில் வடை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லையென்றால், உங்களுக்கான பதிவுதான் இது. 

ஆம், இன்றைய கட்டுரையில் நாம் மீள்மேக்கரை வைத்து வடை செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். இந்த வடை சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த வடை செய்து கொடுங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக,  குழந்தைகள் விரும்பும் சாப்பிடும் வகையில் இந்த வடை இருக்கும்.
இந்த மீல்மேக்கர் வடையை நீங்கள் காபி அல்லது டீயுடன் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் மீள்மேக்கர் வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க:  மதியம் மிச்சமான சாதம் இருக்கா?!மொறுமொறுப்பாக இப்படி வடை செஞ்சு பாருங்க.. ரெசிபி இதோ.. !

மீல் மேக்கர் வடை செய்ய தேவையான பொருட்கள்:

மீல்மேக்கர் - 1 கப்
கடலை மாவு - 1 கப்
சோள மாவு - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மட்டன் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  ஈவினிங் ஸ்நாக்ஸாக சூடாகவும் சுவையாகவும் 'ஜவ்வரிசி வடை' செஞ்சி சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!

செய்முறை:

மீல் மேக்கரில் வடை செய்ய முதலில், எடுத்து வைத்த மீல்மேக்கரை சூடான நீரில் சுமார் 2 நிமிடம் கொதிக்க வைத்து, பிறகு அதை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் 2 முறை கழுவி, பிறகு சின்ன சின்னதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள், மட்டன் மசாலா தூள், மஞ்சள் தூள், சோம்புத்தூள், சீரகப்பொடி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் மீல் மேக்கரையும் சேர்ந்து நன்கு பிசையவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் பிசைந்த மாவை சிறிதளவு எடுத்து வடை போல் கையில் தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் டேஸ்ட்டான மீல்மேக்கர் வடை தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!