மதுரை ஸ்பெஷல் முள்ளு முருங்கை வடை...அற்புத ருசிக்கு அசத்தல் டிஷ்

Published : Mar 08, 2025, 08:00 PM IST
மதுரை ஸ்பெஷல் முள்ளு முருங்கை வடை...அற்புத ருசிக்கு அசத்தல் டிஷ்

சுருக்கம்

மதுரையில் வித்தியாசமான உணவுகளுக்கு பஞ்சமே கிடையாது. அதிலும் ஸ்நாக்ஸ் வகைகள் ஏராளமாக இருக்கும். அப்படி ஒரு ஆரோக்கியமான, சுவையான உணவு தான் முள்ளு முருங்கை வடை. இதை அப்படியே சாப்பிட்டாலும் சரி, மசால் பொடி தூவி சாப்பிட்டாலும் சரி சுவை அள்ளும்.

மதுரை, திருவிழாக்களின் மண்ணாகவும், அத்துடன் அசத்தலான உணவு வகைகளுக்காகவும் புகழ்பெற்ற நகரம். மதுரைக்குள் நுழைந்ததுமே வாசனை சுண்டி இழுக்கும் பாரம்பரிய ஸ்நாக்ஸ், முள்ளு முருங்கை வடை. கிரிஸ்பியான தோற்றம், மொறுமொறு சுவை, முருங்கை இலைகளின் ஆரோக்கியம், இவை அனைத்தும் சேர்ந்த ஒரே சமையல் அதிசயம் தான் இது. இதை எப்படி செய்யலாம் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம். மதுரைக்கு போகும் போது அவசியம் ஒருமுறை சுவைத்து விட்டு வாங்க.

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – 1 கப்
உளுந்து பருப்பு – 1/4 கப்
முருங்கை இலை – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
சோம்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

வயிற்று உபாதைகள் உடனடியாக சரியாக வேண்டுமா? தயிரை இப்படி சாப்பிட்டு பாருங்க

செய்முறை:

- முதலில் கடலைப்பருப்பு மற்றும் உளுந்து பருப்பை 2 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். 
- ஊறிய பருப்புகளை நீர் வடித்து,  பாதி அளவிற்கு தண்ணீர் சேர்த்து, கொரகொரப்பாக அரைக்கவும். மிக்ஸியில் அரைக்கும் போது, பாதி பருப்பு அரைபடாமல் இருக்க வேண்டும்.
- முள்ளு முருங்கை இலையை பறித்து, சுத்தம் செய்து, நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அரைத்து மசித்த முள்ளு முருங்கை இலை, நறுக்கிய வெங்காயம், மிளகாய்கள், சோம்பு, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சிறிய உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கை அளவிற்கு வடையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
- காய்ந்த எண்ணெயில், மிதமான தீயில், மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.
- இப்போது சூடாக இருக்கும் மதுரை ஸ்பெஷல் முள்ளு முருங்கை வடை தயார்!

சமையல் குறிப்பு:

- முள்ளு முருங்கை இலை அதிகம் சேர்த்தால், இது இன்னும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
- மிக்ஸியில் நீர் அதிகம் சேர்க்காமல் அரைக்க, வடை நன்றாக உப்பி வரும்.
-  காரம் அதிகமாக வேண்டும் என்றால், மேலும் ஒரு மிளகாய் சேர்க்கலாம்.
- வெங்காயம் சேர்ப்பது வடைக்கு சிறப்பு சுவை சேர்க்கும்.
வடை கரகரப்பாக இருக்க தண்ணீர் அதிகம் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளவும்.

முள்ளு முருங்கை வடையின் சிறப்பு:

மதுரையின் உணவுப் பாரம்பரியத்தில் இந்த வடை சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. சாதாரண முருங்கை இலை போல் அல்லாமல் முள்ளு முருங்கை இலை தனித்துவமான சுவை மிக்கது. முள்ளு முருங்கை இலைகளின் ஊட்டச்சத்தும், கிரிஸ்பியான வடையின் சுவையும் சேர்ந்து செம டேஸ்டாக  இருக்கும். மேலும், முருங்கை இலைகள், இரத்த சுத்திகரிப்பில் உதவியாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் சிறந்தவை.

ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? ஜப்பானியர்களின் இந்த 5 ஸ்லிம் சீக்ரெட்டை டிரை பண்ணுங்க

முள்ளு முருங்கை ஆரோக்கிய நன்மைகள்:

- முள்ளு முருங்கை இலைகளில் அதிக அளவில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது.
- மதுரை மாநகரின் சிறப்பான வீதிகளில் இதனை காய்ந்த செந்நெய் வாசனையுடன் சுவைப்பதற்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
- முருங்கை இலைகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சளித் தொல்லைகள் நீங்கும்.
- முள்ளு முருங்கை இலைகளை, மிளகு, அரிசியுடன் சேர்த்து அரைத்து, அடையாகவும் செய்து சாப்பிடலாம்.

PREV
click me!

Recommended Stories

பானிபூரி சாப்பிட முயன்ற பெண் திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு.. ஷாக்கிங் வீடியோ!
சாம்பாரை கண்டுபிடித்த ஊர் தஞ்சாவூர்..! சசி தரூர் சொன்ன சாப்பாட்டு மேட்டர்!