
இளநீர் பாயாசம் என்பது தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, கொங்கு நாட்டில் இதை அதிகம் செய்வார்கள். இது இயற்கையான இனிப்பு மற்றும் நறுமணத்துடன், மிகவும் ஆரோக்கியமானது என்பதால் கொங்கு நாட்டின் மிக முக்கியமான பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக உள்ளது.
தேவையான பொருட்கள்:
இளநீர் தண்ணீர் - 1 1/2 கப்
பால் - 1 கப்
நறுமண ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப் (தேவையான அளவு)
தேங்காய் பால் - 1/2 கப்
முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
- இளசாக இருக்கும் பசுமையான இளநீரின் தேங்காயை எடுத்து, சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சிலருக்கு கரகரப்பாக உண்பதற்கு விருப்பம் இருந்தால், மிக்ஸியில் லேசாக பல்ஸ் மோடில் விட்டு எடுத்துக் கொள்ளலாம்.
- ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி வைத்து, அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைய விடவும்.
- பாலில் சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு, அடுப்பை சிம்மில் வைத்து, தேங்காய் பாலை சேர்க்கவும். தேங்காய் பாலை அதிகம் கொதிக்க விடக்கூடாது. இல்லை என்றால் அதன் சுவை மாறிவிடும்.
- ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி, அதில் முந்திரி மற்றும் திராட்சை வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.
- இறுதியில் அடுப்பை அணைத்த பிறகு, இதில் இளநீர் தண்ணீர், இளநீரின் தேங்காய் பேஸ்ட் அல்லது துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
- இப்போது கொங்கு நாட்டு ஸ்பெஷல் இளநீர் பாயாசம் ரெடி.
சூடாக தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா? குறையாதா?
பரிமாறும் முறை :
இதை குளிரவைத்தும், அல்லது சூடாகவும் பரிமாறலாம். மேல் அலங்காரத்திற்காக பச்சை பிஸ்தா, பாதாம் தூவி பரிமாறலாம்.
குறிப்புகள்:
- இயற்கையான இனிப்பு விரும்பினால் சர்க்கரை வேண்டிய அளவுக்கு குறைத்துக் கொள்ளலாம்.
- மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் என்றால் இளநீர் தேங்காயை மிக்ஸியில் நன்கு பேஸ்ட் போல் அரைத்து சேர்க்கலாம்.
- சர்க்கரை சேர்க்க பிடிக்காதவர்கள் இனிப்பு அதிகரிக்க தேவையான அளவு தேன் சேர்க்கலாம்.
- குளிரவைத்து பருகினால் இது ஒரு அழகான டெசர்ட் போல இருக்கும்.
கொங்கு நாட்டில் இளநீர் அதிகமாக விளையும். அதனால், இயற்கையான சுவை மாறாமல், பால், தேங்காய் பால், மற்றும் நெய் சேர்த்து இந்த பாயாசத்தை செய்வார்கள். இது உடலுக்கு குளிர்ச்சி தரும் மற்றும் ஆரோக்கியமானது. இந்த பாயாசத்தை வீட்டில் செய்து பார்த்து, உங்கள் அனுபவத்தை சொல்லுங்க.