மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா – வீட்டிலேயே செய்து அசத்துங்க

Published : Mar 05, 2025, 08:33 AM IST
மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா – வீட்டிலேயே செய்து அசத்துங்க

சுருக்கம்

மதுரையில் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்றாக இருக்கும் ஜிகர்தண்டா தற்போது தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற உணவாகி விட்டது. அதிலும் வெயில் காலம் வந்த விட்டாலே ஜிகர்தண்டா விற்பனை சூடுபிடித்து விடும். வெயிலுக்கு ஜில்லுன்னு ஜிகர்தண்டா சாப்பிட இனி கடைக்கு போகவோ, ஆர்டர் போடவோ தேவையில்லை. வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்.

மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக சமீப காலத்தில் மாறியது தான் ஜிகர்தண்டா. இது வெயில் காலம் மட்டுமின்றி அனைத்து காலங்களிலும் மதுரையில் கிடைக்கும் பிரபலமான குளிர்பானம். இது நன்னாரி சார்பத், பால்கோவா, பாதாம் பிசின், மற்றும் ஐஸ்கிரீம் சேர்த்து தயாரிக்கப்படும். கடைகளில் கிடைப்பதை விட சுத்தமாகவும், சுவையாகவும் வீட்டிலேயே தயாரிக்கலாம். இப்போது கோடை கால வெயில் வேறு துவங்கி விட்டது. மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டாவை உங்கள் வீட்டிலேயே செய்து அசத்தலாம். இது செய்வதும் சுலபம் தான். 

தேவையான பொருட்கள்:

பால் (காய்ச்சி ஆறவைத்தது)     - 2 கப்
பால்கோவா - 1/2 கப்
நன்னாரி சர்பத் - 3 டேபிள் ஸ்பூன்
பாதாம் பிசின் -  2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை     - 2 டேபிள் ஸ்பூன் (அல்லது தேவையான அளவு)
வெண்ணிலா  ஐஸ்கிரீம் - 1 ஸ்கூப்

செய்முறை :

- பாதாம் பிசினை (Badam Pisin) 5-6 மணி நேரம் தண்ணீரில் ஊற விட வேண்டும். இது முழுமையாக ஊறி ஜெல்லி போல மாறும்.
- பால்கோவாவை ஒரு கடாயில் போட்டு, சிறிது பாலை சேர்த்து மென்மையாக கலக்கவும். இதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து, ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- காய்ச்சி ஆற வைத்த பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் நன்னாரி சர்பத், பால்கோவா கலவை மற்றும் சக்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.
-  ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் ஊறிய பாதாம் பிசினை (ஜெல்லி மாதிரி) அடியில் வைக்கவும். அதன் மேல் நன்னாரி கலந்த பாலை கவனமாக ஊற்றவும். கடைசியாக ஒரு ஸ்கூப் வெனில்லா ஐஸ்கிரீம் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது குங்குமப்பூ தூவலாம். இது ருசியாக இருக்கும்.

கூடுதல் சுவைக்கு இதை டிரை பண்ணுங்க...

அசல் மதுரை ஸ்டைல் ஜிகர்தண்டாவில் கூடுதல் சுவைக்காக கடைகளில் முந்திரி, பிஸ்தா சேர்த்துக் கொடுப்பார்கள். அதை வீட்டிலும் சேர்க்கலாம். பாதாம் சேர்க்க விருப்பப்பட்டால் பிசின் அளவை அதிகரிக்கலாம். சர்பத்தின் இனிப்பை குறைக்க விரும்பினால், சக்கரை அளவை குறைத்துக் கொள்ளலாம். அடிக்கும் வெயிலுக்கு இதமாக, ஜில் என மிகவும் சுவையாக இருக்கும் ஜிகர்தண்டாவை ஃப்ரிட்ஜில் சில மணி நேரம் வைத்த பிறகு பரிமாறலாம்.

காபி - டீ : காலையில் குடிப்பதற்கு இரண்டில் எது சிறந்தது?

ஆரோக்கிய நன்மைகள் :

இதில் சேர்க்கப்படும் பால், நன்னாரி சர்பத், பாதாம் பிசின் ஆகியவை உடலுக்கு மிகவும் நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும், தெம்பையும் தரக் கூடியதாகும். இது நீண்ட நேரம் பசிக்காமல் வயிறு முழுவதும் சாப்பிட்ட நிறைவை கொடுக்கக் கூடியதாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.  

ஜிகர்தண்டா வரலாறு :

ஜிகர்தண்டா என்பது 1970-களில் மதுரையில் அறிமுகமானது. முதலில் இஸ்லாமிய சமுதாயத்தில் பிரபலமாக இருந்த இந்த பானம், இப்போது அனைவராலும் விரும்பப்படும் ஒரு சிறப்பான குளிர்பானமாக வளர்ந்துவிட்டது. மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் ஜிகர்தண்டா தற்போது ஃபேவரைட் ஆகிய விட்டது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜிகர்தண்டா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

பானிபூரி சாப்பிட முயன்ற பெண் திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு.. ஷாக்கிங் வீடியோ!
சாம்பாரை கண்டுபிடித்த ஊர் தஞ்சாவூர்..! சசி தரூர் சொன்ன சாப்பாட்டு மேட்டர்!