வாருங்கள்! டேஸ்ட்டான மட்டன் டிக்கா மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் மட்டன் பிரதான இடம் பெற்றுள்ளது. மட்டனின் வாசனைக்கே அனைவரும் வீட்டை சுத்தி சுத்தி வருவார்கள். மட்டன் வைத்து மட்டன் சூப், மட்டன் பிரியாணி, மட்டன் கிரேவி,மட்டன் சுக்கா, மட்டன் குழம்பு என்று பல விதங்களில் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வகையில் இன்று நாம் மட்டன் வைத்து சூப்பரான சுவையில் மட்டன் டிக்கா மசாலாவை செய்ய உள்ளோம். இதனை செய்யும் போதே உங்கள் வீட்டு குட்டிஸ் முதல் பெரியவர்கள் வரை குட்டி போட்ட பூனை மாதிரி கிச்சனையே சுற்றி சுற்றி வருவார்கள்.
வாருங்கள்! டேஸ்ட்டான மட்டன் டிக்கா மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்
கிராம்பு - 4
மிளகு - 8
கசகசா - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லி - 2 ஸ்பூன்
வெங்காய விதை - 2ஸ்பூன்
தயிர் - 3 ஸ்பூன்
வெங்காய விழுது - 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் மட்டனை சுத்தம் செய்து அலசி விட்டு பின் அதனை மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் தயிர் விட்டு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இந்த தயிரில் மட்டன் சேர்த்து பின் வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மட்டனை நன்றாக பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் மல்லி, சீரகம், மிளகு, கசகசா, வெங்காய விதை மற்றும் கிராம்பு ஆகியவை சேர்த்து லேசாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . வறுத்தவற்றை ஆற வைத்து விட்டு பின் அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பொடி போன்று அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியை மட்டனில் சேர்த்து அதனுடன் உப்பு தூவி நன்றாக பிரட்டி விட்டு சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, ஊறிய மட்டனை சேர்த்து பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக வெங்காயத்தை வட்டமாக வெட்டி, அதனை அலங்கரித்து பரிமாறினால் மட்டன் டிக்கா மசாலா ரெடி!