டேஸ்ட்டான, ஸ்பைசியான "கூர்க் ப்ரைட் சிக்கன்" இப்படி செய்து அசத்துங்க!

By Dinesh TG  |  First Published Nov 13, 2022, 10:21 AM IST

இன்று நாம் கூர்க் ப்ரைட் சிக்கன் ரெசிபியை சுவையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .


வார இறுதியான சண்டே வந்தாலே நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் அசைவம் தான். வழக்கமாக செய்கின்ற அசைவ ரெசிபியாக இல்லாமல், கொஞ்சம் வித்தியாசமாக ஒரு ரெசிபியை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? 

அப்படி நினைப்பவர்களுக்கான பதிவு தான் இது.பொதுவாக செட்டிநாடு, மதுரை , நாஞ்சில் நாடு, கொங்கு நாடு முறையில் சமைத்தவர்களுக்கு,இன்று கூர்க் முறையில் சிக்கன் வைத்து சுவையான ஒரு ரெசிபியை பார்க்க உள்ளோம். இந்த கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கனை ஒரு முறை செய்து பாருங்கள், இதனையே மீண்டும் மீண்டும் செய்யும் படி வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் விதத்தில் இதன் சுவை அலாதியாக இருக்கும். 

Latest Videos

undefined

அப்படிப்பட்ட டேஸ்ட்டான , ஸ்பைசியான கூர்க் ப்ரைடு சிக்கன் ரெசிபியை , இந்த மழைக் காலத்தில் செய்து குடும்பத்துடன் ஒன்று கூடி அமர்ந்து சாப்பிட்டால், மேலும் அதன் சுவையை வார்தைகளால் கூற முடியாது.நீங்களே ஒரு முறை செய்து பாருங்கள். இன்று நாம் கூர்க் ப்ரைட் சிக்கன் ரெசிபியை சுவையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் . 

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் – 2
பூண்டு - 5 பற்கள்
மிளகு – 10
லவங்கம் – 5
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
கூர்க் வினிகர் - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன் 
தனியா - 1 ஸ்பூன் 
கடுகு - 1/4 ஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

நாவில் நீர் ஊறச் செய்யும் சுவையான பட்டர் சிக்கன் மசாலா !

செய்முறை:

முதலில் சிக்கனை சுத்தம் செய்து நன்றாக அலசி, தண்ணீர் இல்லாமல் ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும், வெங்காயம் மற்றும் பூண்டினை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் சேர்க்காமல், மிளகு, சீரகம், தனியா, கடுகு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை போட்டு நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக் கொண்டு,கடாயை இறக்கி வைத்து, குளிர செய்து பின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மசாலா பொடி செய்து கொள்ள வேண்டும். 

இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனில ,அரைத்த இந்த மசாலா பொடியை 2 ஸ்பூன் மற்றும் உப்பும் சேர்த்து சிக்கனை சுமார் 1 மணி நேரம் வரை ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை போட்டு, வதக்கி விட்டு, பின் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து சுமார் 4 நிமிடங்கள் வரை வதக்கி விட வேண்டும். 

பின் அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக் கொண்டு, ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து ,தீயினை சிம்மில் வைத்து , நன்றாக வறுத்து விட வேண்டும். பின் இறுதியாக சிறிது வினிகர் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி , தட்டை போட்டு மூடி , சுமார் 5 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். அவ்ளோதாங்க டேஸ்ட்டான , ஸ்பைசியான கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன் ரெடி!

click me!