சண்டே ஸ்பெஷல்! சீஸ் மசாலா பூரி சுட சுட செஞ்சு கொடுக்க 10 கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்!

By Asianet Tamil  |  First Published Apr 29, 2023, 4:36 PM IST

வாருங்கள்! டேஸ்ட்டான செஸ்ஸே மசாலா பூரி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் காணலாம்
 


நாளைக்கு சண்டே. அனைவருக்கும் விடுமுறையாக இருக்கும். ஆகையால் கொஞ்சம் லேட்டா எந்திருச்சு ,லேட்டா சாப்பிடலாம். லேட்டா சாப்பிட்டாலும் கொஞ்சம் லேட்டஸ்ட்டா,டிஃபரென்ட்டா சாப்பிடணும் என்று யோசித்தால் இந்த ரெசிபியை செய்து பாருங்க!

வார நாட்களில் அவசர அவசரமாக சமைக்க வேண்டியுள்ளதால் இட்லி,தோசையை பலரும் செய்து சாப்பிடுவோம். ஆனால் அதனையே சண்டே கூட செய்தால் நிச்சயமாக வீட்டில் உள்ளவர்கள் திட்ட தான் செய்வார்கள்! அதிலும் குட்டிஸ்கள் போய் விடுவாராகில். எனவே சண்டே அன்று அவர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு பிரேக்ஃபாஸ்ட் செய்ய வேண்டுமா?

அப்போ இந்த சீஸ் மசாலா பூரி செய்து கொடுங்க! குட்டிஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சைலன்ட்டா அனைத்தையும் சாப்பிட்டு நெக்ஸ்ட் ரவுண்ட்க்கு வெயிட் பண்ணுவாங்க!

வாருங்கள்! டேஸ்ட்டான செஸ்ஸே மசாலா பூரி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
ரவை - 2 ஸ்பூன்
சீஸ் - 1 கப் (துருவியது)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மல்லித்தழை-கையளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிறிது நெய் ஊற்றி மீண்டும் நன்றாக பிசைந்து 1/2 மணி நேரம் வரை அப்படியே ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம்,பச்சை மிளகாய் ,மல்லித்தழை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சீஸை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பௌலில் அரிந்து வைத்துள்ள வெங்காயம்,மல்லித்தழை,சீஸ் மற்றும் மல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி மற்றும் துருவிய சீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இப்போது மாவினை சிறிய அளவில் எடுத்துக் கொண்டு பூரி போன்று தேய்த்து அதன் நடுவே இந்த சீஸ் கலவி சிறிது வைத்து அதனை மடித்து விட்டு மீண்டும் பூரி போன்று பக்குவமாய் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

இதே போன்று அனைத்து மாவினையும் தேய்த்துக் மாவை எடுத்து உருட்டி, அதை பூரி அளவிற்கு தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூடி அதை மீண்டும் பூரி அளவிற்கு தேய்த்து கொள்ளவும். பின்பு இதே போன்று அனைத்து மாவையும் சின்ன சின்னதாக உருட்டி, சீஸ் கலவையை வைத்து பூரிஅளவிற்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் 1 கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின்னர் அதில் மசாலா பூரியை ஒவ்வொன்றாக போட்டு இரு பக்கமும் பொரித்து எடுத்து எண்ணெய் இல்லாமல் வடிகட்டினால் சீஸ் மசாலா பூரி ரெடி!

வீட்ல எலித் தொல்லை பாடாய்படுத்துதா !அப்போ இந்த ஈஸி டிப்ஸ பாலோ பண்ணி பாருங்க! 1 கூட தப்பிக்காது!

Latest Videos

click me!