பொடி பாகற்காய் வைத்து அருமையான தீயல் செய்துள்ளீர்களா?

By Asianet Tamil  |  First Published Apr 27, 2023, 3:03 PM IST

வாருங்கள்! பாகற்காய் தீயல் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


சர்க்கரை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும் காய்களில் ஒன்று பாகற்காய். பொதுவாக பாகற்காயை குழம்பு அல்லது பொரியல் வைத்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் அதை தாண்டி கொஞ்சம் வித்தியாசமான ஒரு ரெசிபியை செய்ய வேண்டுமென்றால் நீங்க இதனை ட்ரை செய்து பாருங்கள். இன்று கேரளா ஸ்டைலில் பாகற்காய் தீயல் செய்ய உள்ளோம். இதன் சுவை மிக அருமையாக இருக்கும்.

வாருங்கள்! பாகற்காய் தீயல் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்-

சின்ன பாகற்காய்- 1/4 கிலோ
புளி-எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் -1 கப்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

அரைப்பதற்கு:

துருவிய தேங்காய்- 1/ 2 கப்
வர மிளகாய்-8
மிளகு- 1 ஸ்பூன்
தனியா விதைகள்- 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

தாளிப்பதற்கு:

கடுகு-1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்து கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை அரிந்து வைத்து கொள்ள வேண்டும். புளியை 1 பௌலில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொண்டு அதனை கரைசல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வர மிளகாய், மிளகு, உளுத்தம் பருப்பு மற்றும் தனியா விதைகள் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி தேங்காய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்துக் கொண்டு அதனையும் ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது 1 மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து நன்றாக அறித்துக் கொள்ள வேண்டும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பாகற்காய்களை சேர்த்து சிறிது மஞ்சள் தூள் தூவி வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு ,கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொண்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்றாக வெந்த பிறகு பாகற்காய்களை சேர்த்து புளிக்கரைசல் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

Latest Videos


இப்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கலவை கொதித்து கொஞ்சம் கெட்டியானல் அவ்ளோதான் சுவையான பாகற்காய் தீயல் ரெடி! சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் வேறு எதையும் பேசக்கூட மாட்டார்கள்.

வெறும் வயிற்றில் இதனை எடுத்தால் உடற்சூடு, உடல் எடை ,சிறுநீரக பிரச்னை இன்னும் நிறைய பிரச்னைகளை சரி செய்யுமாம்!
click me!