வாழைக்காய் வைத்து பஜ்ஜியே செய்யாதீங்க! இப்படி கோலா உருண்டை செஞ்சு கொடுங்க! 10 சாப்பிட்டாலும் பத்தல என்பார்கள்

By Asianet Tamil  |  First Published Apr 26, 2023, 5:16 PM IST

வாருங்கள்! சுவையான , மொறுமொரு வாழைக்காய் கோலா உருண்டை ரெசிபியி வீட்டில் எப்படி எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 


வழக்கமாக வாழைக்காய் வைத்து பஜ்ஜி,பொரியல்,சாப்ஸ் போன்றவையை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். என்றாவது கோலா உருண்டை செய்துள்ளீர்களா? பொதுவாக மட்டன் வைத்து தான் பலரும் கோலா உருண்டை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இன்று கொஞ்சம் வித்தியாசமாக வாழைக்காய் வைத்து கோலா உருண்டை செய்ய உள்ளோம்.

வாருங்கள்! சுவையான, மொறுமொரு வாழைக்காய் கோலா உருண்டை ரெசிபியி வீட்டில் எப்படி எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 3
வெங்காயம் – 2
பொட்டுக்கடலை – 1 கையளவு
சோம்பு – 1 ஸ்பூன்
பூண்டு – 10 பற்கள்
இஞ்சி – 1 இன்ச்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 1
ஏலக்காய் -3
தேங்காய் – 1/4 மூடி துருவியது
பச்சை மிளகாய் – 3
கசகசா – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/2 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாழைக்காயின் தோல் நீக்கி விட்டு அதனை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை அரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

பின் மிக்சி ஜாரில் சோம்பு, பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், தேங்காய், பச்சை மிளகாய், கசகசா, வெங்காயம், மல்லித்தழை பெருங்காயம், மஞ்சள் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே மிக்ஸி ஜாரில் துருவி துருவிய வாழைக்காயை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்து அதில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு ஒரே மாதிரியான அளவிலான உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து கொஞ்சம் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு, அடுப்பின் தீயினை மிதமாக வைத்துஒவ்வொரு 4 முதல் 5 உருண்டைகளை போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுவென வாழைக்காய் கோலா உருண்டை ரெடி! இதற்கு டொமேட்டோ கெட்ச் அப் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நீங்களும் ஒரு முறை இதனை ஈவினிங் ஸ்னாக்சிற்கு செய்து பாருங்க! 

சுட சுட இப்படி முட்டை மசாலா தோசை சுட்டு கொடுத்தா 10 கூட சாப்பிடுவாங்க ! நீங்களும் 1 முறை ட்ரை பண்ணி பாருங்க !
 

Tap to resize

Latest Videos

click me!