சுட சுட இப்படி முட்டை மசாலா தோசை சுட்டு கொடுத்தா 10 கூட சாப்பிடுவாங்க ! நீங்களும் 1 முறை ட்ரை பண்ணி பாருங்க !

By Asianet Tamil  |  First Published Apr 26, 2023, 4:29 PM IST

வாருங்கள் ! முட்டையின் கமகம வாசனையில் வேற லெவல் டேஸ்டில் இருக்கும் முட்டை மசாலா தோசை ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


வழக்கமாக மசால் தோசை எனில் உருளைக்கிழங்கு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள்.ஆனால் இன்று நாம் முட்டை வைத்து முட்டை மசால் தோசை செய்யவுள்ளோம். முட்டையின் கமகம வாசனையில் டேஸ்ட்டான தோசை. இதனை நீங்கள் ஒரு முறை செய்தால் போதும். பின் இதனையே மீண்டும் மீண்டும் செய்யும் படி கேட்பார்கள்.

வாருங்கள் ! வேற லெவல் டேஸ்டில் இருக்கும் முட்டை மசாலா தோசை ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

1 கப் தோசை மாவு
முட்டை -4
பெரிய வெங்காயம்-2
தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கடுகு -½ ஸ்பூன்
மிளகு தூள் -½ ஸ்பூன்
மஞ்சள் தூள் -½ ஸ்பூன்
தனியா தூள்-½ ஸ்பூன்
மிளகாய் தூள்-½ ஸ்பூன்
கரம் மசாலா-½ ஸ்பூன்
கறிவேப்பிலை-2 கொத்து
மல்லித்தழை-கையளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டையை ஒரு பௌலில் ஊற்றி நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். வெங்காயம் ,தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் கடுகு சேர்த்து தாளித்து விட்டு, பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். அதன் பச்சை வாசனை சென்ற பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு , பின் தக்காளியை சேர்த்து வதக்கி விட வேண்டும்.

தக்காளி நன்கு மசிந்த பிறகு , மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகிய மசாலாக்களை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும் . இபோது முட்டையை ஊற்றி உப்பு ,மிளகுத் தூள் சேர்த்து முட்டை நன்றாக உதிர்ந்து வரும் வரை கிளறி விட வேண்டும்.

அடுப்பில் தோசைக்கல் வைத்து , கல் சூடான பின் மாவை சற்று தடிமனாக ஊற்றி அதன் மேல் முட்டை மசாலாவை சேர்த்து தோசை அளவிற்கு பரப்பி விட வேண்டும். சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வெந்த பிறகு எடுத்து , மேல் மல்லித்தழையை தூவி பரிமாறினால் எத்தனை வைத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

கமகம வாசனையில் ஆளை தூக்கும் இறால் பிரியாணி! ஒரு பருக்கை கூட மீந்தாது!
 

Tap to resize

Latest Videos

click me!