கமகம வாசனையில் ஆளை தூக்கும் இறால் பிரியாணி! ஒரு பருக்கை கூட மீந்தாது!

By Asianet Tamil  |  First Published Apr 26, 2023, 2:02 PM IST

வாருங்கள்! டேஸ்ட்டான இறால் பிரியாணி ரெசிபியை வீட்டில் எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


வழக்கமாக ஞாயிற்று கிழமைகளில் அசைவம் தான் பலரும் எடுத்து சமைப்பார்கள். அதிலும் குறிப்பாக சிக்கன் மற்றும் மட்டன் தான் பலரும் சமைப்பார்கள். இந்த வாரம் சிக்கன் , மட்டன் எடுக்காமல் கடல் வகையான இறால் எடுத்து டேஸ்ட்டான
பாருங்க. உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி வகையில் இதன் சுவையும் மனமும் சூப்பராக இருக்கும்.

வாருங்கள்! டேஸ்ட்டான இறால் பிரியாணி ரெசிபியை வீட்டில் எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

இறால்- 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி-2டம்ளர்
வெங்காயம்-3
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
தக்காளி-2
பச்சை மிளகாய்-1
தயிர்-1/4 கப்
புதினா- கையளவு
மல்லித்தழை-கையளவு
மஞ்சள் தூள்-1 /2 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
பட்டை-1
கிராம்பு-2
மராட்டி மொக்கு- 1
ஏலக்காய்-2
பிரியாணி இலை-2
சோம்பு- 1 ஸ்பூன்
உப்பு -தேவையானஅளவு
எண்ணெய் -தேவையான அளவு
நெய்-தேவையான அளவு
தண்ணீர் -3 கிளாஸ்

செய்முறை:

முதலில் இறாலை சுத்தம் செய்து விட்டு தண்ணீர் ஊற்றி அலசி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் வேண்டும். வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் குக்கர் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடான பின் அதில் கிராம்பு, பட்டை, பிரியாணி இலை சோம்பு, மராட்டி மொக்கு ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின் அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வந்த பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும். அதன் பச்சை வாசனை சென்ற பிறகு, மல்லித்தழை மற்றும் புதினா சேர்த்து நன்றாக கிளறி விட்டு பின் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

அடுத்ததாக தக்காளி சேர்த்து , தக்காளி நன்கு மசியும் வரை எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விட்டு , பின் சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கி விட வேண்டும். இறால் நன்கு மசாலாவுடன் சேரும் வரை நன்றாக கிளறி விட வேண்டும். இறாலில் இருந்து தண்ணீர் பிரியும் வரை கிளறி விட்டு வைத்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் .

தண்ணீர் கொதித்த பின் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து இதில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின் சிறிது மல்லித்தழை மற்றும் புதினா இலைஆகியவை தூவி மூடி விட்டு 2 விசில் வைத்து இறக்கி விட வேண்டும்.

வாழைப்பூ சேர்த்து உருண்டை குழம்பு செய்துள்ளீர்களா?1 பருக்கை சாதம் கூட வீணாகாது! நீங்களும் 1 தடவ ட்ரை செய்ங்க!

Tap to resize

Latest Videos

click me!